About

Tuesday, 30 July 2013

தொடரும் நம் சூழல் பயணங்கள்: I


தொடரும் நம் சூழல் பயணங்கள்: I


கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்ன என்று யோசிக்கும் போதுதான் ஓ! குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் வகுப்பு எடுக்க போறன்..அதனாலதானு  தெரிஞ்சுது....ஒரு இருபது நாளுக்கு முன்பு நாகர்கோவில்ல ஒரு காட்டு எலி பத்தி ஆராய்ச்சி முடிஞ்சிட்டு வந்த கையோட ரிப்போர்ட் எழுத வேண்டியும் இருந்துச்சு. அப்போதான் நானும் நீலகிரி இயற்கை வரலாறு சங்கமும் சேர்ந்து - ஒரு நாள், பழங்குடி குழந்தைகளுக்கு "உயிரினங்கள் அவசியம்" பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த யோசிச்சோம். நாங்க இந்த நிகழ்ச்சிய சிற்ப்பா பண்ணனும்னு யோசிட்டே நாள் பிக்ஸ் பண்ணி  தயாரானோம். நிகழ்ச்சி தொடங்கும் நாள் வெகு அருகிலே வர ..நான் நிகழ்சிக்கு தேவையான பொருள்களை என் அலுவலகத்தில் (Zoo Outreach) இருந்து பெற்றுகொண்டேன்.

காலை நிகழ்சிக்கு, நான் முந்தின நாள் இரவே அங்கு போய்விட்டேன்.  நிகழ்ச்சி நடக்கும் இடம் உதகமண்டலம்,  இரவு நான் தங்கியது கோத்தகிரியில்....காலை எழுந்து என் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு, நிகழ்சிக்கு ஒரு முறை ஒத்திகை செய்துவிட்டு கிளம்பினேன்...என் தோழி எனக்காக கோத்தகிரியில் காத்திருந்தாள். என் தோழியும் நானும்  காரில் சரியான நேரத்தில் நிகழ்விடத்திற்கு சென்று சேர்ந்தோம்...எங்களுக்கு மிக அருகிலே குழந்தைகள் ஆரவாரமாய் குதூகலிக்க, நானும் அங்கே சிறிது நேரத்தில் ஒரு குழந்தைகளாகவே மாறிப்போனேன். நான் சென்ற இடம் தேனீ அருங்காட்சியகம். அழகும், நேர்த்தியும் சேர்ந்த அந்த இடம் என்னை மிக கவர்ந்தது. கடுங்குளிரில் நான் வகுப்பிற்குள் சென்றேன். அங்கு பல வண்ண வண்ண பட்டாம்பூச்சி குழந்தைகளையும், சுவற்றில் இருந்த தேனீகளையும்  பார்த்தவுடனே நான் மிக ஒரு காட்டில் இருப்பதாக உணர்தேன். 

சந்தோஷமான காலை வணக்கத்துடன் இயல்பாக சூழல் அறிமுகத்துடன்  வகுப்பு தொடங்கியது. வந்திருக்கும் 36 குழந்தைகளும் அருகிலுள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர்கள். எனக்கு இவர்களை யார் என தெரியாததால் " Know each other" விளையாட்டு மூலம் அவர்களை தெரிந்துகொண்டேன். 


பின்பு ஐந்து வகை உயிர் குழுக்களை பற்றி சொல்லிவிட்டு, அவர்களையும் திரும்ப சொல்ல சொல்லி, நானும் சொல்லிக்கொண்டேன். அவர்களின் உற்சாகமும், உன்னிப்பான கவனமும் என்னை மிக சிறப்பாக செயல்பட தூண்டியது.
தேநீர் இடைவேளைக்கு பின்பு "வங்காரி மாதாய்"  தேன் சிட்டு- காணொளி காண்பித்துவிட்டு, குழந்தைகளுடன் நான், நீலகிரி உயிர்க்கோள காப்பகம் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு புரியும் வண்ணம் சொன்னேன். 
வனம் பற்றியும் அங்குள்ள வன உயிர்கள் பற்றியும் சொல்லிவிட்டு,  இயற்கை தமிழ் காணொளி காண்பித்தேன்.


இந்த இளம் குழந்தைகள் இயற்கையின் பங்கு பற்றி பல கேள்விகளை கேட்டார்கள். பின்னர் "உங்கள் விலங்கை கண்டுபிடிக்க" என்ற விளையாட்டு 5 வெவ்வேறு குழுக்களாக பிரித்து விளையாடப்பட்டது. 

"ஒவ்வொரு இனங்கள் பங்கு" பற்றி தமிழில் ஒரு பாடல் பாடினேன். இது ஒவ்வொரு இனங்கள் பங்கு மற்றும் சுற்று சூழல் முக்கியத்துவத்தை குறித்தது.


மகரந்தசேர்க்கை பற்றி குழந்தைகளுக்கு சுலபமாக புரியும் வண்ணம் "சுவரொட்டி" பயன்படுத்தி, நான் பயனுள்ள மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் உயிரினங்கள் என்ன என்ன என்று விளக்கினேன். அவை, வண்ணத்து பூச்சிகள் மற்றும் தேனீக்கள் மட்டுமல்ல, குரங்குகள், தோட்டத்தில் உள்ள பல்லி, வெளவால்கள், எலிகள் மற்றும் பறவைகள். மிகச்சிறிய குழந்தைகள் அதிகம் இருப்பதால் "சிறு யானை காணொளியை" காண்பித்தேன்.


மதிய உணவிற்கு பின் ஒரு 'energizer'  என்ற ஒரு சின்ன விளையாட்டை குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தோம். 
பின்னர் பங்கேற்பாளர்கள் ஐந்து குழுக்கள் பிரிக்கப்பட்டு, ஒரு குழு தலைவர் தேர்வுசெய்து, வௌவால் பற்றி செய்திகள் மிக எளிமையாக சொன்னேன். பழந்தின்னி  வௌவால் பற்றி அதிக எளிமையான தகவல்களை சொன்னேன்.
பின்னர் அணி தலைவர் அணி உறுப்பினர்களுடன் விவாதித்து விட்டு, பார்வையாளர்கள் முன்னிலையில் வௌவால் பற்றி மேலும் பல செய்திகளை  சொன்னார்கள்.
 "பையனும் ஒரு ஆப்பிள் மரமும் " கதையை கூறிவிட்டு, பின்னர்  "மனிதர்களுக்கு மரங்களின் பங்களிப்பு" பற்றி தமிழில் ஒரு நாட்டுப்புற பாடல் பாடிவிட்டு,  உணவு சங்கிலி பற்றியும் மற்றும் மாசுபாடு பற்றியும் பேசிவிட்டு, "சேகர் தத்தாத்ரி"- இன் (SOS) தமிழ் வீடியோ ('சோலை காடுகளை காப்போம்') வை போட்டு விட்டு அமர்ந்தேன்.


பின்னர் அனைத்து மாணவர்களும் நமது சுற்று சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

ஜூ அவுட்ரீச் (Zoo Outreach)  அமைப்பிலிருந்து வாழ்த்து அட்டைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. நீலகிரி இயற்கை வரலாறு சங்கம் (NNHS) மற்றும் ஜூ அவுட்ரீச் அமைப்பு (விலங்கு பூங்கா) இணைந்து தேனீ அருங்காட்சியகத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

************************************************************

அவசியம் பாதுகாக வேண்டியது இரெண்டே இரண்டு விஷயம்தான் ...ஆம்...நம் குழந்தைகளும், நம் காடுகளும்...நம்முடைய ஒவொரு சிறிய முயற்சியும் ஒரு பெரிய மாற்றத்தை விரைவில் ஏற்படுத்தும் ....என்ற நம்பிக்கையில் பிரவின் குமார்.

எல்லா விதத்திலும் எனக்கு உதவிய என் ஆசிரியர்கள் டேனியல் 

மற்றும் மாரிமுத்து அவர்களுக்கு என் நன்றி.

Reactions:

0 comments:

Post a Comment