About

Tuesday 18 November 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 34

வனவிலங்கு வார விழா நிகழ்ச்சி:
விநாயகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி

வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்டி அரசு நடு நிலைப்  பள்ளியில் நடத்தினேன். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. கிரிஜா அவர்களை சந்தித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை தயார் செய்தேன் . சுமார் 63 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, இன்றைய  நாளில் நாம் என்ன கற்று கொள்ளப் போகிறோம்  என சொன்னேன். வன விலங்கு வார விழா ஏன் கொண்டாட வேண்டும்? எனவும் கூறினேன். சில மாணவர்களிடம் மட்டும் அவர்கள் பெயர், வகுப்பு  மற்றும் கடைசியாக அவர்களின் காட்டு  பயண அனுபவம் குறித்து கேட்டேன். இந்திய குரங்குகளை பற்றி ஒரு சிறிய அறிமுகத்துடன் ஆரம்பித்தேன். நமது மலைகளைப் பற்றியும், இங்கு காணக் கூடிய விலங்குகளைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தேன். இந்த பகுதி கிழக்குக் தொடர்ச்சி மலைக்கு அருகில் இருப்பதால் சேர்வராயன் மற்றும் கொல்லி மலைகள் சிறப்பையும் அங்குள்ள சில பாலூட்டிகளைப் பற்றியும் சொன்னேன். 



பலவகைப்பட்ட விலங்கு அட்டைகளும், வண்ணப்படங்களும், சிறிய விலங்கு கதை புத்தகங்களையும், வகுப்பறையில் பார்வைக்கு வைத்திருந்தேன். அனைவரும் இதனை பார்வையிட்டனர். பின்பு பொதுவாக  வன விலங்குகளின் நன்மைகளையும், நமது காட்டின் நன்மைகளின் எடுத்து சொன்னேன்.



உலகளவில் அழிந்துபோன, அழிவில் உள்ள, நம்மூர்  பகுதியில் அழிவை எதிர்நோக்கியுள்ள  மஞ்சள் தொண்டை குருவி, மலை அணில், தங்க பல்லி, அழுங்கு பற்றிய பல சுவாரசிய தகவல்களை கதை போலச் சொல்லிவிட்டு சோலை காடுகளைக் காப்போம்  என்ற வீடியோவைப்  போட்டுக் காட்டினேன். 



மேலும், வேட்டையும், சுற்றுச்சூழல் சீர்கேடும் எப்படி மனிதனை அச்சுறுத்கிறது என்று சொல்லி விட்டு ஒரு ''Energizer'' என்ற ஒரு விளையாட்டை விளையாட செய்தேன்.

பின்பு அனைவரையும் மூன்று குழுக்களாக பிரித்து வௌவால் தகவல் பெட்டகத்தை  கொடுத்தேன். அதை தொடர்ந்து சுமார்  15 நிமிடங்களுக்கு காட்டு வௌவால்களின் வகைகள், முக்கியத்துவம், அச்சுறுத்தல்கள்,  பற்றியும் விவரமாக எடுத்து சொன்னேன்.

அப்படியே குழுவிற்கு ஒரு குழுத்தலைவரை நிர்ணயிதேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் தயாரானார்கள். ஒவ்வொரு குழுத் தலைவரும் அனைவர் முன்னாலும் வந்து "வௌவால்கள்" குறித்த தகவல்களை சொல்லிவிட்டு வந்தனர். அனைவருக்கும் கைதட்டல்கள் மூலமாக நன்றிகளை சொல்லிவிட்டு, நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க என்ன என்ன செய்ய முடியும் என்றும்,  சொல்லிவிட்டு, வன விலங்கு பாதுகாப்பு உறுதிமொழியை சொல்லி, வன விலங்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன்.    




வன விலங்கு குறித்த சேதி, தினம் தினம் நமது காட்டு மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்போதுதான் வன விலங்கு வேட்டை குறையும், நமது காட்டின் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கப்படும்.

வன விலங்கு வார விழா அன்று மட்டும் இந்த பரப்புரை போதாது. நமது முழக்கம் எப்போதும் நம் மண்ணையும், மலைகளையும், நம் மக்களையும், நமது உயிரினங்களையும் பாதுகாக்க தொடரும். 

இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய பள்ளி தலைமை ஆசிரியை, திருமதி. கிரிஜா மற்றும் இதர ஆசிரியர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய இந்திய அரசின் வன விலங்கு குற்றத் தடுப்பு அமைப்பிற்கும் (Wildlife Crime Control Bureau) என் நன்றிகள். மேலும் ZOO/WILD அமைப்புகளுக்கும் என் சிறப்பு நன்றிகள்.    

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

0 comments:

Post a Comment