About

Monday 27 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 36



IUCN – வருடாந்திர கூட்டம் - 2014  டெல்லி

ஓவ்வொரு வருடமும் IUCN எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குழு தங்களது வருடாந்திர கூட்டத்தை ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தி வருகிறது. இந்தாண்டு நம் டெல்லியில், அக்டோபர் 30 முதல் நவம்பர்  2 வரை நடைபெற்றது.  இதனை மத்திய அரசின் வனத்துறையுடன், சென்ட்ரல் ஜூ அத்தாரிட்டி இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.




சென்ட்ரல் ஜூ அத்தாரிட்டியின் நிரந்தர அங்கமான, அவர்களுக்கு உதவிகளை புரிந்து வரும் எங்கள் அலுவலகம் சார்பில் நாங்கள்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அலுவலகத்திலிருந்து அனைத்து வன விலங்கு ஆராய்ச்சியின் விஞ்ஞானிகளும், சூழல் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம்.  இந்த கூட்டம் ஹோட்டல் லலித்தில் ஏற்பாடு செய்திருந்ததுது.  இந்த ஆண்டுக்கான மைய குறிக்கோள்; ‘One Plan Approach”, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், பூங்கா நிர்வாகிகளும், வனததுறை அலுவலர்களும், உயர் பதவி அமைச்சர்களும் வருகை தந்திருந்தனர்.  






மூன்று நாட்களும் பல்வேறு விவாதங்குகள் - நடந்தன.  அனைத்தும் சில வகையான அழிவின் உச்சத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது பற்றியும், கவனிக்காமல், மட்டமாக உள்ள சில இந்திய வன விலங்கு பூங்காவிலுள்ள விலங்குகள் என்ன செய்வதென்றும், விலங்குகளை அவற்றின் அழிநிலையை கணக்கிட வேண்டிய புது உத்திகள் குறித்தும், ஆசியாவில் உள்ள சில குறிப்பிட்ட அதிகம் கவனிக்க வேண்டிய உயிரினங்கள் குறித்தும், வன விலங்கு மரபியல் பற்றிய உலகளாவிய குழு தொடங்கப்பட வேண்டியும் , இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்தும், அடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும், காலநிலை மற்றம் குறித்து மிகப் பிரம்மாண்டமாக உலக அளவில் நடக்கப் போகிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடுகிற நிகழ்வும் என பல முக்கிய நிகழ்வுகள் இந்த மூன்று நாட்கள் நடந்தது.





முதல் நாள்       ஒன்னி பயர்ஸ்  - தலைவர் CBSG   -  சு . சின்ஹா  – IUCN  - இந்தியா. W .S.  போனால்   -   இந்திய வனத்துறை; சாலி வாக்கர் - ஜூ அவுட்ரீச் அமைப்பு ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து   -  இந்தியாவில் நடந்த வனவிலங்கு அபிவிருத்தி மேலாண்மை திட்டங்கள் குறித்து பேசினார். பின்பு கடந்த வருடத்தின் ஆண்டறிக்கை விளக்கமாக கூறினார்கள்.





பின்பு “ஒன் பிளான் அப்ரோச்” என்றால் என்ன என்பதை விளக்கினார்கள். பின்பு தொடர்ந்து முழு உரையாடல்கள் நடந்தன. இரவில் மததிய அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டோம்.  நம் இந்திய பாரம்பரியமும் புகழும் மற்ற நாட்டினர் உணரும் வண்ணம் நம் பராமாய இசை, நடனம், பாடல் என கோலாகலமாக இருந்தது  நானும் கூட இதில் நடனமாடினேன்.  மகிழ்ந்தேன்.

ஓற்றைக் கொம்பு காண்டாமிருகம் காப்பாற்ற இந்தியா எடுத்துவரும் சீரிய முயற்சி பற்றி விவாதிக்கப்பட்டது.  “காண்டாமிருகம் - நமது லட்சியம் 2020” ல்  நமது தொலை நோக்கு பார்வை என்ன? என சுசி எல்லிஸ் - (இன்டர்நேஷனல் காண்டமிருக பாதுகாப்பு அமைப்பு) மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.
.




குழுக் கலந்துரையாடல் என்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. மதிய உணவிற்கு பின்பு டெல்லி பூங்காவை பார்வையிட்டோம்.  பலவிதமான, இதுவரை நான் பார்த்திராத பலவகை விலங்ககளான இமாயலய கரடி, ஹீலாக் ஹீலாக் எனும் குரங்கு, முதலைகள் போன்றவை பார்ப்போரை  பிரம்மிக்க வைத்தது.  மேலும் இன்றைய நாளில் நடக்க விருந்த மத்திய அமைச்சகத்தின் நிகழ்வில் எங்களையும் பங்கேற்க அழைத்தனர்.  மத்திய அரசின் வனவிலங்கு வேட்கை தடுப்பு துறையும் - டெல்லி பூங்காவும் இணைந்து "இத்தனை வருடங்களாக வன்முறை வேட்டையினால் கை பிடிக்கப்பட்ட"  புலித்தோல், காண்டாமிருக கொம்பு, கரடி முடி, முயல் முடி, பல் போன்றவற்றை தீயிட்டு எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் மத்திய அரசின் சுற்றுச்சூழல்  அமைச்சர் திரு.ஜாவேத்கர் கலந்து கொண்டார். தீயில் எரியும் இந்த புலித்தோலை பார்த்ததும் சற்றே பயமும், வேட்டையின் தீவிரதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பின்பு  டெல்லியின் "பழைய கோட்டைக்கு"  சென்றோம்.  அங்கு ஒலி-ஒளி சித்திரம் நடைபெற்றது. நம்மை பழைய காலததிற்கோ கூட்டிச் சென்றது, மிகவும் அருமை.











தொடர்ந்து WAZA  – தொடக்க நிகழ்வு. மாலை உணவு நிகழ்வில் கலந்து கொண்டோம். அனைவரும் நன்றி சொல்லிவிட்டு நாளை மறுநாள் கோவைக்கு புறப்பட்டோம்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் எனக்கு ஒரு புது வித்தியாசமான அனுபவத்தை தந்தது.  குறிப்பாக பல நாட்டு அறிஞர்களுடன் பேசவும், அவர்களின் சிறப்பான வேலைகளைப் பற்றியும் தொpந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது. கலந்து கொள்ள வாய்ப்ப கொடுத்த பன்னாட்டு வன விலங்கு நிறுவனமும் அழைத்து சென்ற என் அலுவலகத்தின் சாலி வாக்கர் அவர்களுக்கு என் நன்றிகள்.


அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 


0 comments:

Post a Comment