About

Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 42


வெளவால்கள் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறை 
சோர்லா காடு – கர்நாடகா

கடந்த சனவரி 29,30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களும் ‘வெளவால்கள் பாதுகாப்பு குறித்த’ களப்பணியுடன் கூடிய பயிற்சிப் பட்டறை சோர்லா என்ற கர்நாடக காட்டில் நடைபெற்றது.  இதில் நான் கலந்து கொண்டேன். மொத்தம் 23 பேர் வந்திருந்தனர்.முதல் நாள் “பயிற்சியாளர்களின்” வெளவால் அறிமுகத்துடன் ஆரம்பமானது.  பரிணாம வளர்ச்சி, உணவு, வாழிடம், பகல் உறக்கம் பற்றி சொன்னார்கள்.  பின்பு மதிய உணவிற்குப் பின்பு வெளவாலை ஏன் பிடித்து ஆராய வேண்டும்ட, எப்படிப் பிடிப்பது, எளிய முறைகள், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என பல வகைப்பட்ட களப்பணி சம்பந்தமானவை விவரிக்கப்பட்டன.  மிஸ்ட் வலைகள், ஹார்ப் வலைகள் பற்றி சொன்னார்கள்.  இந்த இரண்டு வகை வலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.  மாலை நேரத்தில் ஒரு முறை ‘எப்படி வலைகளை’ பயன்படுத்துவது என நாங்கள் செய்து பார்த்தோம்.  பின்பு பொழுது இருட்டும் நேரம் 23 பங்கேற்பாளர்களும் காட்டிற்கு சென்றோம்.
பின்பு அங்கு வலைகளை ரெடி செய்து விட்டு சற்று தூரமாக அமர்ந்தோம்.  சிறிது நேரத்திற்கு பிறகு வலையில் ஒரு சிறிய வெளவால்.  ஆ!  ஒரே சந்தோஷம் கையில் கையுறைகளை இட்டுவிட்டு வலையிலிருந்து  லாவகமாக பிடித்து, பின்பு சிறிய துணிப்பைக்குள் போட்டனர்.  பின்பு அப்படியே அமர்ந்து ஒவ்வொருவராக வெளவாலை வெளியே எடுத்துக் கையில் பிடித்துப் பழகினோம்.  நானும் தான்.  எனக்கு என்னவோ பெரிய  சந்தோஷம்.  இந்த வெளவால் பத்திதானே ஊர் ஊரா,  எல்லா குழந்தைகள் கிட்டேயும் போய் வகுப்பெடுக்கிறேன்.  ஆனால் இன்னைக்கு அதை நான் தொட்டு, தூக்கி, கொஞ்சி, அதைப் பத்திபடிக்கிறோம் என்று நெனச்சாலே ஒரே பூரிப்புதான். 
அப்புறம் திருகுமானியை பயன்படுத்தி அதன் குறிப்பிட்ட பாகங்களை அளவெடுத்தோம்.  பின்பு இறக்கையை விhpச்சுப் பார்த்தோம்.  அதன் உடல் எடையை பார்த்தோம்.

எல்லா பார்த்து முடிந்ததும் இதை இனம் கண்டுபிடித்து சொன்னார்கள். அங்கேயே அந்த வௌவாளை பறக்க விட்டு விட்டோம்.  இவைகள் பறக்கும் போது மீயொலிகள் மூலமாக சப்தம் எழுப்பிக்கொண்டே செல்லும் என்று சொன்னார்கள். இது ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தாலும் அவர்களுடைய ‘ வெளவால் ஒலிவாங்கி’ பெட்டி மூலமாக மீயொலியை கேட்டேன். அப்புறம் நாங்க எங்களோட ரீசார்ட்டுக்கு திரும்பினோம். 
மறுநாள் கானொலி “வெளவால் வகைப்பாட்டியில்” மற்றும் பிரிவுகள் குறித்த வகுப்பு ஆரம்பமானது.  இதில் வெளவாலின் சில குணாதிசியங்கள், சில பகுதிகள், வெளவாலை இனம் கண்டறிய உதவுவதாகக் கூறினார்கள்.  அதாவது அதனுடைய காது வடிவம், வால், மூக்கு, தோல் இறக்கையின் நீளம், முடியின் வண்ணம், அமைப்பு, கர்ப்பம் மற்றும் பாலினம் ஆகும்.  9 வகையான வெளவால் குடும்பங்கள் இந்தியாவில் உள்ளதாகவும், மொத்தம் இனங்கள் வசிக்கின்றன எனவும் சொன்னார்கள்.

பின்பு காலை 9 மணிக்கெலலாம் நாங்கள் காட்டின் அருகிலுள்ள வெளவால் குகைக்கு புறப்பட்டோம்.
சுமார் 15 நிமிட நடைக்கு பிறகு குகையை அடைத்தோம்.  நான் 1500க்கும் மேலான வெளவால்கள் ஒரே இடத்தில் பார்ப்பது இது தான் முதல் தடவை எனக்கு ஒரே பிரம்மிப்பு. எங்கு திரும்பினாலும் எனக்கு வெளவால்களே தென்பட்டன. அவை வேகமாக அங்கும், இங்கும் பறந்த வண்ணம் இருந்தது.  இவைகள் உருவத்தில் ஒவவொன்றும் ஒவ்வொரு மாதியாக இருந்தது.  இதில் ‘மினியாப்டிரஸ்’ என்ற வகையும், “ரைனோலபஸ்” என்ற வகையையும் சிறிய கையடக்க வலையை வைத்துப் பிடித்தோம்.  ஒரே வீச்சில் சுமார் 7 வெளவால்கள் வலையில் விழுந்தன.  அவற்றை துணிப்பைக்கு மாற்றினோம். 

இதில evening bats எனும் சாயங்காலம் திரியும் பூச்சி திண்ணி வெளவால்தான் அதிகம் பிடிப்பட்டது. மாணவர்கள் சிலர் இதை கையில் பிடித்து இனம் கண்டறிய முன்றனர்.  பின்பு களக்கையேட்டில் குறிப்பெடுத்தனர்.  இதன் எடை 14 கிராம் தான் இருந்தது.  சிறியதாக வால் கூட இருந்தது. பகலில் ஓய்வெடுக்கும் இந்த வகை வெளவால், பொழுது சாயும்போது தொடங்கி  நடு இரவு வரை பூச்சிகளைத் தேடி காட்டில் திரியும்.  பூச்சிகளே இவற்றின் பிரதான உணவு.  இவற்றின் "மீயொலிச்" சப்தங்களை ஒலி உள்வாங்கிப் பெட்டி மூலமாக பதிவு செய்தோம்.  இது கேட்டதற்கு ‘டக் டக் டக்’ என்று இருந்தது.  பின்பு அடுத்த வகை வகை வெளவால் பிடித்தோம்.  இதை இறக்கை மடக்கி வெளவால் எனக் கூறவும் செய்யலாம்.  ஏனெனில் இது தன்னுடைய இறக்கiயின் அடிப்பகுதியை மடக்கி வைத்துக்கொள்ளும்   ஒரு சிறப்பு குணம் இந்த வெளவாலுக்கு, இதன சப்தத்தையும் பதிவு செய்து விட்டு பறக்க விட்டோம்.

பின்பு நாங்கள் மதிய வேளையில் மரபியல் மூலமாக வெளவால்களைப் படிக்க என்ன தேவை? ஏப்படி என கூறினார்கள்.  பின்பு மாலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி வெளவால் பிடிக்க காட்டிற்குள் சென்றேhம்.  அங்கு 6 கிராம் எடையுள்ள “ரைனிலோபஸ்” பிடித்தோம்.  இரவு 10.10 மணிக்கு “வெளவால் - மீயொலி’ குறித்த வகுப்பு நடந்தது.  நான் வகுப்பில் தூங்கி விட்டேன்.
மறுநாள் காலை வெளவால் பாதுகாப்பு, வருங்கால செயல்திட்டம் பற்றி ‘திரு. ராகுல்’ விளக்கினார்.  பின்பு வெளவால்-கணிணி மென்பொருள் விளக்கம் தரப்பட்டது.
புது நண்பர்கள் பலரை சந்தித்தேன்.  எனக்கு பயனுள்ளதாய் இருந்தது.  காட்டின் ஊடே மூன்று நாள், நிசப்தத்தின் அமைதியிலும், வெளவால்களின் மீயொலியிலுமே சென்றது.

இந்த நிகழ்ச்சி செல்ல அனுமதி வழங்கிய என் அலுவலகத்திற்கு  Indian Bat Conservation Research Unit மற்றும் கோவை ஜூ அவுட்ரீச் அமைப்புகளுக்கும் எனது சிறப்பு நன்றிகள். குறிப்பாக கோவை "சிக்ஸ்த் சென்ஸ்" அமைப்பினருக்கும் நன்றிகள். சிக்ஸ்த் சென்ஸ் அமைப்பு என் பயணத்திற்கும். களப்பணிக்கான  பணத்தை  கொடுத்து உதவினர். 
அன்புடன், 
பிரவின்குமார்
கன்னியாகுமரி 

Reactions:

0 comments:

Post a Comment