About

Monday 27 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 37


அலுங்கு விழப்புணர்வு நிகழ்ச்சி 
நாணல் குளம், திருநெல்வேலி.

கடந்த மாதத்தில் ஒரு நாள் அலுங்கு - பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் அடிப்பகுதியிலுள்ள நாணல்-குளம் கிராமத்தில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 28 குழந்தைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அட்ரீ (ATREE) திரு. மதிவாணன் அவர்களின் உதவியுடன் நடைபெற்றது.  






முதலில் குழந்தைகளின் பெயர், ஊர், அவர்கள் கடைசியாக பார்த்த விலங்கு, பார்க்க ஆசைப்படுகிற விலங்கு என அனைவரிடமும் கேட்டுத் தொரிந்து கொண்டேன்.  பின்பு இந்தியாவின் காடுகள் குறித்தும், தமிழகத்தின் காடுகள், வகைகள் குறித்தும் சொன்னேன்.  பின்பு 5 வகை உயிர்க் குழுக்கள் பற்றிச் சொல்லிவிட்டு அழிந்து போன ‘டோ டோ’ பறவை பற்றி கூறினேன்.






பின்பு இந்த காட்டை ஒட்டிய அடிப்பகுதியில் வசிக்கும் சில சிறிய பாலுட்டிகள் பற்றியும், அவற்றின் உணவுச் சங்கிலியின் அம்சம் பற்றி சொன்னேன். அப்படியே ‘காடுகள்’ வீடியோவைக் காட்டிவிட்டு பாலூட்டிகள் என்றால்  என்ன? வகைகள் என்னென்ன என்று கூறினேன்.  பின்பு அலுங்குகள்  எனப்படும் எறும்பு திண்ணிகள் பற்றி வகுப்பைத் துவக்கினேன்.  வகுப்பில் ஒரு சிலரைத் தவிர பல குழந்தைகளுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. எறும்பு தின்னியின் படத்தைக் காட்டி விளக்கினேன்.  இவற்றின் வகைகள், உருவம், வாழிடம், சிறப்புகள், எடை, தகவமைப்பு, உணவு என பல செய்திகளை அவர்களிடத்தில் கதை போலச் சொல்லி விளக்கினேன். பின்பு அவற்றின் ஆயுட்காலம் பற்றியும், உடலில் எடையில் 3 இல் ஒரு பங்கு செதில்கள் எனவும், அவற்றின் குறைவான பார்வைத்திறன் பற்றியும் சொன்னேன்.  






தொடரும் வேட்டையாடுதல் இந்த விலங்கை இன்று அழிவிற்கு கொண்டு போய் விட்டது எனக் கூறினேன்.  மருத்துவம், மருந்து என எண்ணற்ற அலுங்கு நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறினேன்.  அழிவின் விளிம்பில் உள்ள நம்மூர் அலுங்குகளைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல் குறித்து எடுத்துக் கூறினேன்.
பின்பு 5 குழுக்களாக குழந்தைகளை பிரித்து, குழுத் தலைவரை நிர்ணயித்தேன். சிறிது இடைவெளியில் பிறகு குழுத்தலைவர் அனைவரின் முன்பும் வந்து வகுப்பில் கலந்து கொண்டதை மறுபடியும் எடுத்துக் கூறினர்.





வந்திருந்த அனைவருக்கும் அலுங்கு படம் போட்டை அட்டைகளை வழங்கினேன்.  வகுப்பின் இறுதியில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.







மேலும் அலுங்கு பற்றிய வீடியோ ஒன்று காட்டிவிட்டு இந்த அறையில் காட்சிக்கு வைத்திருந்த சிறிய அலுங்கு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.  பயன் பெற்றனர்.




இந்த மாதிரியான சிறிய விலங்குகள் பற்றிய செய்திகளை பலருக்கும் தெரிவிக்க இம் மாதிரியான சிறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அவசியம். வளரும் கிராமத்து குழந்தைகள் அவர்களை சுற்றி உள்ள விலங்குகளைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது  அவசியம் அல்லவா !!! அதற்கு இம்மாதிரியான சிறிய நிகழ்ச்சிகள் நிச்சயம் உதவும். வன விலங்குகளை பாதுகாக்க, சூழல் அக்கறையான வளரும் தலைமுறைகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பிரவின்.   

அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி.    

0 comments:

Post a Comment