About

Tuesday 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 43



பல்லுயிரியப் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை

பல்லுயிரியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை இராமநாதபுரம் மாவட்டத்தின் TDA  கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இது 13 பிப்ரவரி அன்று நடைபெற்றது.  

சுமார் 340 மாணவ – மாணவிகள் புhpந்து கொள்ளும் வண்ணம் பல்லுயிரியப் பாதுகாப்புக் கருத்து வழங்குவது தான் இந்த பட்டறையின் நோக்கம்.  ஆனால் அதையும் தாண்டி மாணவ – மாணவிகள் வன விலங்குகள், தாவரங்கள் காடுகள் குறித்த மேம்பட்ட அறிவை இந்த பட்டறை வாயிலாகக் கற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.  அதைத் தொடர்ந்து நான், இன்று நாம் என்னென்னக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என பட்டியலிட்டுவிட்டு, நம்மை சுற்றியுள்ள சில தாவர விலங்குகள் பற்றிச் சொன்னேன்.  பல்லுயிம் பற்றியும், ஏன் காப்பாற்றப்பட வேண்டும் எனவும் சொன்னேன்.
பின்பு இன்று சுற்றுசூழல், வன விளங்கு குறித்த  புத்தகக் கண்காட்சி, வகுப்பறை விவாதங்கள், குழு கலந்துரை யாடல், வீடியோக்கள் போன்றவற்றை மாணவர்கள் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்.



முதலில் ராமநாதபுரத்தில் அதிகம் காணக்கூடிய தாவர, விலங்குகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  பின்பு அழிவில் காடுகள் என்ற வீடியோவைக் காட்டினேன்.  அழிந்த மற்றும் ஆபத்திலுள்ள சில உயிhpனங்களை பட்டியலிட்டேன்.  டோ டோ பறவையின் வீடியோ ஒன்றைக் காட்டினேன்.



மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்குத் தொடர்ச்சி மலை பற்றியும் அங்குள்ள தாவரங்கள் , விலங்ககள் குறித்த பொதுவான தகவல்களைச் சொன்னேன்.  பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது.  நன்னீரை நம்பி வாழும் விலங்குகள் 300 மில்லியன் மக்கள், தாவரங்கள், விலங்குகள் குறித்து, சொன்னேன்.  பின்பு நன்னீர் எப்படி உருவாகிறது.  பின்பு நன்னீர் ஆதாரங்கள் நன்னீர் சொன்னேன்.



விலங்குகளின் சூழல் நன்மைககளைச் சொன்னேன்.  (எகா) காட்டு மாடு, காட்டு கீரி, வெளவால், நத்தைகள், மீன்கள் அலுங்கு என பல தகவல்களைச் சொன்னேன். 

பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் தனித்துவமான இடங்கள், தனித்துவமான இனங்கள் குறித்து விளக்கினேன்.  பின்பு காடுகளும், விலங்ககளும்  அழிய சில காரணங்கள் . சில

1. காட்டுத் தீ
2. குப்பைகள்
3. கால நிலை மாற்றம்
4. காணாமல் போகும் விவசாய நிலங்கள் 
5. பொருளாதார வளர்ச்சி
6. முறையற்ற சுற்றுலா
7. வேட்டை

பின்பு நீர் வாழ்த் தாவரஙகளைப் பற்றி அட்டைகள் மூலமாக விளக்கினேன்.  முக்கியமாக வகைகள் மற்றும்  பயன்கள் பற்றி சொன்னேன்.  

சிறிய தேநீர் இடைவெளிக்கு பின்பு தாவர மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று 10 நிமிடம் சொன்னேன்.  பின்பு 2 வீடியோக்களைக் காட்டினேன்.  மதிய உணவு இடைவெளிக்குப் பிறகு ஆறு குழுக்களுக்கு ‘விநாடி-வினா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன்.  மற்ற மாணவர்கள் வன விலங்கு குறித்த வீடியோக்களை பார்த்து ரசித்தனர்.



நிகழ்ச்சி மாலையில் நிறைவு பெற்றது.  கல்லூரி முதல்வா கலந்து கொண்டார். சிறந்த சார்ட் (presentation) செய்தவர்களுக்கும் ‘விநாடி வினா’ போட்டியில் பங்கேற்ற , வெற்றிபெற்ற முதல் மூன்று குழுவினருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  இந்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடந்து முடிந்தது.

இப்படிக்கு,
ஆர்.பிரவின் குமார்
கன்னியாகுமரி 

0 comments:

Post a Comment