About

Thursday, 23 January 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் X: பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்



தொடரும் நம் சூழல் பயணங்கள்
பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்:

கடந்த நவம்பர் 17 அன்று "பாலுட்டிகள்" குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கொடைக்கானலில் உள்ள வானவில் பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றிருந்தேன். பங்கேற்பாளர்கள் அனைவரும் பள்ளியர் பழங்குடிகளின் குழந்தைகள் ஆகும். முதலாவதாக அனைவரின் பெயரையும் நான் ஞாபகப்படுத்திகொண்டு, கடந்த முறை நான் வௌவால் வகுப்பில் கற்றுக் கொடுத்தலில் இருந்து சில கேள்விகளை கேட்டு, பின்னர் இன்று என்ன என்ன கற்றுக்கொள்ள போகிறோம் (குரங்குகளை பற்றி) என்பதை சொன்னேன். கடந்த முறையை விட இந்த முறை குழந்தைகள் கற்றுக்கொள்ள ஆர்வமாகவும், நிதானமாகவும் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. 



முதலில் அனைவர்க்கும் பாலுட்டிகள் குறித்த ஒரு விளக்கத்தை சொல்லிவிட்டு அவர்களை சுற்றி உள்ள பாலுட்டிகள் பெயர்களை சொல்ல சொன்னேன்.






பலவகை பாலுட்டிகள் பிரிவை சொல்லிவிட்டு அவைகளில் சூழல் முக்கியத்துவத்தை சொன்னேன்.   
பின்னர் குரங்கினங்களை பற்றியும், இந்தியாவில் மட்டுமே உள்ள குரங்குகள் பற்றியும், நம் மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள குரங்குகளை பற்றி நிறைய தகவல்களை சொன்னேன். 

பின்பு அனைவரையும் எட்டு குழுக்களாக பிரித்து, குரங்குகள் பற்றி வர்ணம் செய்தல் செயல் முறையை செய்தேன். அனைவரும் கொடுக்கப்பட்டுள்ள பலவகை கறுப்பு வெள்ளை குரங்கு படங்களுக்கு வண்ணம் செய்து, அனைவர் முன்னாலும் காண்பித்து கைதட்டகளை பெற்றனர். 



அப்புறமாக எப்படி குரங்குகள் மரத்தை நாடியுள்ளன என்றும், எவ்வாறு காடு அழிப்பு நம் குரங்குகளை அழிவிற்கு காரணமாகிறது என்றும் சொல்லிவிட்டுசிறிய வீடியோவைக் காட்டி விட்டு, காடு அழிப்பதால் எப்படி விலங்குகள் பாதிப்பு அடைகிறது என்பதை ஒரு விளையாட்டு மூலம் நடத்திவிட்டு, குரங்குகளை பற்றி சில சிறப்புகளை குழுவாக பிரித்து வாசிக்க சொன்னேன்.

கடைசியாக அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டோம். தோழர் அசோக் ராஜன் நன்றி உரையுடன் நிகழ்ச்சி முடிந்தது. 




Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 35 கட்டுரை  காணாமல் போகும் காட்டு நண்டுகள்: நன்னீர் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள சில அரிய வகைக் காட்டு நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்ததைப் பற்றியும், அவற்றின் வாழிடச் சுருக்கம் பற்றியும், தற்போது  மேற்குத் தொடர்ச… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 38 சிறிய பாலூட்டிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கன்னியாகுமரி “நான் காணும் சிறிய பாலூட்டிகள்” என்ற தலைப்பில் மூன்று மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள, மிடலக்காடு என்ற கிராமத்திலுள்ள கே.டி.பி… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 33 வன விலங்கு வார விழா நிகழ்வு 2 குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் வன விலங்கு வார விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிகழ்ச்சி ஞாயிறு (5.10.2014… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 34 வனவிலங்கு வார விழா நிகழ்ச்சி: விநாயகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்டி அரசு நடு நிலைப்  பள்ளியில் நடத்தினேன். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமத… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 36 IUCN – வருடாந்திர கூட்டம் - 2014  டெல்லி ஓவ்வொரு வருடமும் IUCN எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குழு தங்களது வருடாந்திர கூட்டத்தை ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தி வருகிறது. இந்தாண்டு நம் டெல்லியில், அக்டோபர் 30 … Read More

0 comments:

Post a Comment