உலக வன நாள் விழா 2014.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது. கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பில் நடைபெற்ற உலக வன நாள் நிகழ்சிக்காக சேலத்தில் உள்ள சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் உலக வன நாள் விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா வன சரகர் திரு.இளங்கோ...