
தொடரும் நம் சூழல் பயணங்கள் X
பள்ளியர் பழங்குடி குழந்தைகளுடன் ஒரு நாள்:
கடந்த நவம்பர் 17 அன்று "பாலுட்டிகள்" குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக கொடைக்கானலில் உள்ள வானவில் பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றிருந்தேன். பங்கேற்பாளர்கள் அனைவரும் பள்ளியர் பழங்குடிகளின் குழந்தைகள் ஆகும். முதலாவதாக அனைவரின் பெயரையும் நான் ஞாபகப்படுத்திகொண்டு, கடந்த முறை நான் வௌவால் வகுப்பில் கற்றுக் கொடுத்தலில் இருந்து சில கேள்விகளை கேட்டு,...