பேரூர் பள்ளி குழந்தைகளுடன் பல்லுயிரியம் நிகழ்ச்சி
கடந்த மாதத்தில் ஒரு நாள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் அரசு பள்ளியில், பல்லுயிரியம் குறித்த இரண்டு மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சியை "சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேசன்" ஏற்பாடு செய்திருந்தது.
முதலில் என்னை அறிமுகம் செய்து கொண்டு, மலைப் பகுதிக்கு அருகில் வசிக்கும் குழந்தைகளை எழுந்திரிக்க சொன்னேன். மூன்று மாணவர்கள் அவர்கள் அருகில் உள்ள மலையை பற்றியும்...