
தொடரும் நம் சூழல் சந்திப்புகள் II
கடந்த ஞாயிறு (28 ஜூலை) அன்று திருநெல்வேலியில் உள்ள The Florence Swainson Higher Secondary School for the deaf க்கு ஒரு சுற்றுச்சூழல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன்.
எப்போதும் போல அதே சந்தோசத்துடன், நானும் என் தோழர் வெங்கடேஷ் பாபுவும் வகுப்பறையை, தலைப்பிற்கு ஏற்றவாறு தயார் செய்தோம். கொண்டு வந்திருந்த அட்டைகளை ஒட்டிவிட்டு தலைமை ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தோம். இந்த பள்ளிதான் 2004 வருடத்திற்கான...