About

Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 40



நன்னீர் பல்லூயிரியம் - குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி - 
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

கடந்த பிப்ரரி 9ம் தேதி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இதில் இளநிலை உயிர் தொழில் நுட்ப மாணவர்களும், பாலிடெக்னிக் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர். திரு.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். 



இந்த நிகழ்ச்சியை நடத்த சிவகாசி எக்ஸனோரா திருமதி. லதா அபிரூபன் அவர்களின் உதவி சிறப்பானது.

நிகழ்ச்சியில் நன்னீர் வாழ்வாதரங்கள், பாதுகாக்க வேண்டியதன் அவசியம், நன்னீரில் வாழும் சில வகை உயிரிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பற்றி சில செய்திகளை நான் கூறினேன்.  முதலில் ஒரு சிறிய அறிமுகத்தோடு வகுப்பை தொடர்ந்து நன்னீர் அவசியம் குறித்துச் சொன்னேன்.  பின்பு நன்னீர் வாழ்வாதாரம் பற்றியும் உயிரினங்கள் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.  பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி தகவல்களைச் சொல்லிவிட்டு, மேற்கு தொடர்ச்சி மலை வரைபட நிகழ்வை இரண்டு குழுக்களுக்கிடையில் நடத்தினேன். 

1. மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாநிலங்கள். 
2 . மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய ஆறுகள்.  
மாணவ- மாணவிகள் இந்த நிகழ்வில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.  சிறிய வீடியோ ஒன்றைக் காட்டிவிட்டு, பின்பு 5 வகை உயிர் குழுக்களைப் பற்றிச் சொன்னேன்.  பின்பு தட்டான்கள், நத்தை , சிலந்தி, நண்டுகள், மீன்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் பற்றிச் சொன்னேன்.  அவற்றின் சூழல் நன்கைளை அவர்களுக்கு புரியும் வண்ணம் சுலபமாக விளக்கினேன்.



பின்பு மேற்கு தொடர்ச்சி மலையின் சில தனித்துவமான இடங்களில் வசிக்கம் சில தனித்துவமான உயிரினங்கள் பற்றியும் அவைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் சுருக்கமாகச் சொன்னேன்.


பின்பு சோலைக் காடுகளைக் காப்போம்’ என்ற வீடியோவை திரையிட்டு காட்டினேன். வர்களிடம் குழு உரையாடலைக் ஆரம்பித்தேன்.  “நம் நன்னீர் பாதுகாப்பை உறுதி செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது எது?” என்று கேட்டதும் பதில் சட்டென வந்தது.  "சார், நம்ம குளங்களை தூர் வாறனும்"  "நம்ம நன்னீரை அசுத்தப் படுத்தக் கூடாது". "நாம நன்னீர் நிலைகளை சுத்தி மரம் நட வேண்டும்" "தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தணும்" எனச் சொன்னார்கள் கைத் தட்டல்களைப் பெற்றனர்.




மேலும் அடிப்படை ஆராயச்சிகள், நன்னீர் மேலாண்மை மற்றும் சட்டங்கள் மூலமாக நன்னீர் நிலைகளையும் அதை நம்பியுள்ள உயிர்களையும் பாதுகாக்க முடியும் எனச் சொன்னேன். பின்பு காந்தியடிகள் மற்றும் தலாய் லாமா அவர்களின் சூழல் சிந்தனைகளைச் சொல்லிவிட்டு, அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.



அனைவரின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. ஈகோ கிளப், சிவகாசி எக்ஸ்னோரா மற்றும் ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரிக்கும் என் நன்றிகள்!

பிரவீன் குமார்,
கன்னியாகுமரி. 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 18 கோத்தகிரி கீ-ஸ்டோன் சமுதாய வானொலி  தமிழ் நாட்டில் பல சமுதாய வானொலிகள் இருந்தாலும் நமக்கு அருகில் இருக்கும், நன்றாக பழங்குடி மக்களுக்கு தினசரி செய்திகளை வழங்கிவரும் ஒரு வானொலி நமது கோத்தகிரியில் உள்ள கீ-ஸ்டோன் சமுதாய வ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 19 உலக வன நாள் விழா 2014. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது.  கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பில்   நடைபெற்ற உலக வன நாள் நிகழ்சிக்காக சேலத்தில் உள்ள சி எஸ் ஐ பாலிடெக்னிக் க… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 17 காகித பாதுகாப்பும் - தனி மனித சூழல் கரிசனமும் கடந்த பிப்ரவரி 26 அன்று ஒரு நாள் கருத்தரங்கம் Government College of Technology, கோவையில் நடந்தது. தலைப்பு: "பசுமை தொழில்நுட்பமும், நிலைத்த நீடித்த வாழ்வும்".  இந்த நிகழ்… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 23 சிறிய பாலுட்டிகள் பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடையம் கடந்த ஏப்ரல் 30 அன்று "நான் காணும் சிறிய பாலுட்டிகள்" என்ற ஒரு நிகழ்ச்சியை திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் வட்டத்தில் உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தில் … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 21 வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  மற்றும்  புகைப்பட கண்காட்சி - நானல் குளம்  இந்த ஏப்ரல் 7ம் தேதி அன்று வௌவால் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட… Read More

0 comments:

Post a Comment