About

Tuesday, 28 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 44

வெளவால்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி கொடைக்கானல்

கடந்த 2014 ல் ஒரு நாள் வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி ‘என் ஸ்கூல் சத்ய சுரபி” (My school sathya surabi) யில் நடைபெற்றது.  இதை பழனி மலை  பாதுகாப்புக் கழகமும், ஜூ அவுட்ரீச் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது.  மொத்தம் 89 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.  முதலில் ஒரு சில மாணவ – மாணவிகள் பெயர், வகுப்பைக் கேட்டறிந்தேன்.  பின்பு இந்தியாவும், காடுகளும் 5 வகை உயிர் குழுக்கள் , அரிய வகை விலங்குகள் பற்றி சொல்லிவிட்டு "காடுகள்" வீடியோவைக் காட்டினேன்.  பின்பு மலை அணில், வெளவால், கீரி, முள்ளெலி குறித்த “வகுப்பை" நடத்தினேன்.  தொடர்ந்து, வெளவால்கள் பற்றி சொல்வதற்கு முன்பு பாலூட்டி என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? சிறிய பெரிய பாலூட்டிகளுக்கு உதாரணம் ஏது? எனச் சொல்லச் சொன்னேன்.




பின்பு அனைவரையும் 5 குழுக்களாக பிரித்தேன். குழுவிற்கு தலைவர் ஒருவரை நிர்ணயித்தேன். வெளவால் தகவல் பெட்டகத்தை அனைவருக்கும் வழங்கினேன்.  தொடர்ந்து வெளவால்களின் வகைகள், இனம் கண்டறிய வேண்டிய பாகங்கள், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொல்லி முடித்தேன். 10 நிமிட இடைவெளி கொடுத்தேன். 




பின்பு குழுத் தலைவர் வகுப்பின் கரும்பலகை முன்னால் வந்து வெளவால் குறித்த தகவல்களை சொல்லிவிட்டு சென்றனர். தொடர்ந்து உலகின் மிக பெரிய இறக்கையுடைய "நிக்கோபார்" இராட்சத வெளவால் குறித்த வீடியோ ஒன்றை காட்டிய பின்பு அதே குழுக்கள் ‘குழு வாண்ம் தீட்டுதல் என்ற செயல்பாட்டை நடத்தினேன். 




நீங்கள் உங்கள் பகுதியில் உள்ள காட்டுயிர்களை எப்படி கண்டறிவது என்று சொன்னேன்.  மேலும் இவர்களுக்கு ZOO Outreach அமைப்பினர் வழங்கிய வாழ்த்து அட்டைகளை வழங்கினேன்.

1. மலை அணில் குழு
2. இருவாச்சி குழு

என இரண்டு மாணவர் குழுக்களை ஆரம்பித்தோம். இந்த குழுக்கள் வரும் நாட்களில் வனம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அனைவரும் உறுதிமொழி செய்து கொண்டு விடைபெற்றோம்.






என் ஸ்கூல் சத்ய சுரபி பள்ளிக் குழந்தைகளின் ஆர்வமும், இயற்கை மேல் உள்ள அன்பும் மென் மேலும் வளர, பெருக வாழ்த்துக்கள். 
 
நன்றி.

இப்படிக்கு,
பிரவீன் குமார்
ஆய்வு மாணவர்
நூருல் இஸ்லாம் பல்கலைகழகம்
கன்னியாகுமரி.

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 44 வெளவால்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி கொடைக்கானல் கடந்த 2014 ல் ஒரு நாள் வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி ‘என் ஸ்கூல் சத்ய சுரபி” (My school sathya surabi) யில் நடைபெற்றது.  இதை பழனி மலை  பாதுகாப்புக் க… Read More

0 comments:

Post a Comment