About

Tuesday, 11 March 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 17

காகித பாதுகாப்பும் - தனி மனித சூழல் கரிசனமும்
கடந்த பிப்ரவரி 26 அன்று ஒரு நாள் கருத்தரங்கம் Government College of Technology, கோவையில் நடந்தது.
தலைப்பு: "பசுமை தொழில்நுட்பமும், நிலைத்த நீடித்த வாழ்வும்". 
இந்த நிகழ்ச்சி save survive sustain என்ற முத்தான மூன்று வாசகத்துடன் ஆரம்பமானது. இந்த மொத்த கருத்தரங்கத்தின் நோக்கமே காகிதத்தை காப்பதும், பயன்படுத்துவதை குறைப்பதும், அதன் மூலம் நம் காடுகளையும் நமது பல்லுயிரிகளையும் பாதுகாப்பதாகும். மிக முக்கியமான, சிறப்பான, வரவேறக்கதக்க விசயம் என்னவென்றால் இந்த ஒரு நாள் முழுவதும் (இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கி, இன்று வரையிலும்) இந்த நிகழ்சிக்காக எந்த ஒரு காகிதமும் பயன்படுத்தவில்லை என்பதாகும். இது ஒரு பேப்பர் இல்லா (zero paper) நிகழ்வு. பெரும்பாலும் சணல் பைகளும், துணிகளும் பயன்படுத்தி இந்த விழா அரங்கு சிறப்பாக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் பல வகை கைவினை பொருள்களை மாணவிகளும் மாணவர்களும் (நாம் குப்பை என தூக்கி எரியும்) பிளாஸ்டிக் கேன்களில் இருந்து தயாரித்து பார்வைக்கு வைத்திருந்தனர். இது பார்ப்பதற்கு சந்தோசமாகவும் மறுஉபயோகத்தின் அவசியத்தை சொல்வதாகவும் இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேப்பர் பயன்பாடு மற்றும் காடுகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் இரண்டு மணிநேர பயிற்சி பட்டறையை நடத்துவதற்காக நான் சென்றிருந்தேன். இந்த பட்டறை மதிய உணவுக்கு பின்பு என்பதால் நான் அதிகம் யோசித்தேன், எவ்வாறு இந்த மாணவர்களின் கவனத்தை வகுப்பின் மீது கொண்டுவர என்று. இதற்காகவே முதலில் காடுகளின் அவசியத்தை குறித்த ஒரு வீடியோவை காண்பித்தேன். பின்பு உயிரின பன்மயம்இந்தியாவில் காடுகள், பல வகை உயிரினங்கள், அவற்றின் எண்ணிக்கைகள், அழிவில் மற்றும் ஆபத்தில் உள்ள தாவர, விலங்குகளையும் சேர்த்து சில அரிய பவளப் பாறைகளையும் பற்றி எடுத்து சொன்னேன்.



பின்பு காகித உற்பத்தியில் நமது சமூக காடுகள் பங்களிப்பை பற்றியும், எவ்வாறு பல வழிகளில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கலாம் எனவும் சொன்னேன். எவ்வாறு மாற்று வழிகளை யோசிக்கலாம் எனவும் கூறினேன். சில மாணவர்களிடம் கேள்விகளை கேட்டேன்.      



எவ்வாறு காகித தொழிற்ச்சாலை கழிவுகள் நமது மண்ணையும், நமது அடிப்படை குடிநீரையும் அழிக்கின்றன?. மேலும் நமது தாவர, விலங்குகளையும், கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகளையும் அழிகின்றன எனவும் சொன்னேன்.

அபரிமித காகித பயன்பாடு எவ்வாறு நமது சுற்றுச்சூழலை சிதைக்கின்றன என்றும், எவ்வாறு நேரிடையாகவும் மறைமுகமாகவும் நமது வாழ்வாதாரங்களை பாதிக்கின்றன என்றும் கூறினேன்.  

மறுசுழற்சி செய்த காகிதம் எப்படி மண்ணுக்கும், நமக்கும் நல்லது, எப்படி மறுசுழற்சி செய்த காகிதத்தை, காகிதக்கூழ் தயாரிக்க பயன்படுத்தி சூழல் மாசுபாட்டை குறைக்கலாம் என்றும் சொன்னேன்.




பின்பு ஆய்வகங்களில், நூலகங்களில் எவ்வாறு காகிதத்திற்கு மாற்று வழி உண்டு எனவும் கூறினேன். பின்பு எவ்வாறு மக்களை இந்த தனியார் காடு வளர்க்கும் யோசனையில் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் சொன்னேன். பின்பு கடைசியாக, ஓவ்வொரு வருடமும்  சுமார் 1.5 லட்சம் மரங்கள் வெறும் tissue பேப்பர் க்காக வெட்டப்படுகின்றன என கூறினேன். நவீன உக்திகள், மாற்று எரிசக்திகள் மற்றும் நுண்ணுயிரிகளை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்தி இந்த தொழிற்ச்சாலைகளில், சூழலை சிதைக்காத பேப்பரை தயாரிக்க நமது யோசனை என்ன என கேட்டேன்தனிமனித சூழல் கரிசனம் மற்றும் விழிப்புணர்வு மிக அவசியம் என சொல்லி முடித்தேன். 

குறிப்பு: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவர்க்கும் துணிகளினாலான சான்றிதழ்களை வழங்கியது குறிபிடத்தக்கது.      

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 43 பல்லுயிரியப் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை பல்லுயிரியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை இராமநாதபுரம் மாவட்டத்தின் TDA  கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இது 1… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 44 வெளவால்கள் பாதுகாப்பு நிகழ்ச்சி கொடைக்கானல் கடந்த 2014 ல் ஒரு நாள் வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி ‘என் ஸ்கூல் சத்ய சுரபி” (My school sathya surabi) யில் நடைபெற்றது.  இதை பழனி மலை  பாதுகாப்புக் க… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 42 வெளவால்கள் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறை  சோர்லா காடு – கர்நாடகா கடந்த சனவரி 29,30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களும் ‘வெளவால்கள் பாதுகாப்பு குறித்த’ களப்பணியுடன் கூடிய பயிற்சிப் பட்டறை சோர்ல… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 45 வௌவால் குறித்த தொகுப்பு: வௌவால்களைப் பற்றி நான் எழுதிய சிறிய தொகுப்பு "மின்மினி " என்ற குழந்தைகளுக்கான சிற்றிதழீல் வெளியாகியது.       நன்றி. இப்படிக்கு, பிரவீன் குமார் ஆய்வு மாணவர்  நூருல் இஸ்லாம் பல்… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 46 கட்டுரை: "முள்ளெலிகள் - அறிய வேண்டிய உயரினங்கள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை "காடு இதழில்" பிரசுரமாகி உள்ளது.   நன்றி. இப்படிக்கு, பிரவீன் குமார் ஆய்வு மாணவர் ந… Read More

0 comments:

Post a Comment