About

Thursday, 3 March 2016

தொடரும் நம் சூழல் பயணங்கள் 58

மகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று 
வழங்கும் நிகழ்ச்சி

கடையநல்லூர், தென்காசி
  
கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 2016 சனவரி முடிய நான் சீனாவில் இருந்தேன். அதனால் என்னால் நமது தமிழகத்தில் சுற்றுச்சூழல் வகுப்புகளை ஏற்பாடு செய்வதில் சிறிது தொய்வு ஏற்ப்பட்டது. கடந்த பிப்ரவரியில் கடையநல்லூர் மகாத்மா பள்ளிக்கூடத்தில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை தென்காசி எக்ஸ்னோரா தலைவி. திருமதி.G.S.விஜய லக்ஷ்மி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். என்னை மரங்கள் பற்றி பேச அழைத்திருந்தார்கள். 




நிகழ்ச்சி காலையில் ஆரம்பமானது. வழக்கமான அறிமுக உரையுடன் ஆரம்பமாகி, பின்பு மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்தது. பள்ளி பயிலும் மாணவ மணிகளுக்கு நாட்டு மரக் கன்றுகளை வழங்கினார்கள். துணிப் பைகளுடன் மாணவர்கள் மரங்களை பெற்றுகொண்டனர். அப்படியே அவர்களுக்கு ஒரு சிட்டுக் குருவி கதை மூலமாக வங்காரி மாதாய் பற்றி சொல்லிவிட்டு, மரங்கள் பற்றியும் சொன்னேன். அவர்கள் வீட்டில் பார்த்த, காட்டில் பார்த்த மரங்கள் பற்றியும் சொல்லிவிட்டு, மரங்கள் மனிதனுக்கு மட்டுமல்ல எல்லா வகை பறவை, பூச்சிகளுக்கும் ஒரு இருப்பிடமாக உள்ளது என்பதை விளக்கி விட்டு சில காணொளிகளைக் காட்டினேன். 





பின்பு அவர்களிடம் சிறிது பேசிவிட்டு, சோலை காடுகளை காப்போம் என்ற காணொளியைக் காட்டிவிட்டு  ஒரு சூழல் உறுதிமொழியுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன். 

  






நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த எக்ஸ்னோராவிற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், இந்த நிகழ்ச்சிக்காக பாப்பான்குளத்தில் இருந்து வந்த எனதருமை நண்பன் கிட்டுவிற்கும் எனது நன்றிகள்.       

அன்புடன் 
பிரவின் குமார் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 39 வனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா. கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  இது சீனாவின் தலைநகர் ‘பிஜிங்’ நகர… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 40 நன்னீர் பல்லூயிரியம் - குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி -  ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. கடந்த பிப்ரவரி 9ம் தேதி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இதில் இளநிலை உயிர் தொழ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 41 வெளவால்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி் - சிவகாசி கடந்த பிப்ரவரி  9 அன்று வௌவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிவகாசியிலுள்ள ‘சுருதி வித்யோதயா’ பள்ளியில் நடத்தினேன்.  இந்த நிகழ்ச்சி வெளவ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 42 வெளவால்கள் பாதுகாப்பு குறித்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறை  சோர்லா காடு – கர்நாடகா கடந்த சனவரி 29,30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களும் ‘வெளவால்கள் பாதுகாப்பு குறித்த’ களப்பணியுடன் கூடிய பயிற்சிப் பட்டறை சோர்ல… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 43 பல்லுயிரியப் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறை பல்லுயிரியப் பாதுகாப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை இராமநாதபுரம் மாவட்டத்தின் TDA  கலை, அறிவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இது 1… Read More

0 comments:

Post a Comment