About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, 27 April 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 37


அலுங்கு விழப்புணர்வு நிகழ்ச்சி 
நாணல் குளம், திருநெல்வேலி.

கடந்த மாதத்தில் ஒரு நாள் அலுங்கு - பாதுகாப்பு விழப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் அடிப்பகுதியிலுள்ள நாணல்-குளம் கிராமத்தில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 28 குழந்தைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அட்ரீ (ATREE) திரு. மதிவாணன் அவர்களின் உதவியுடன் நடைபெற்றது.  






முதலில் குழந்தைகளின் பெயர், ஊர், அவர்கள் கடைசியாக பார்த்த விலங்கு, பார்க்க ஆசைப்படுகிற விலங்கு என அனைவரிடமும் கேட்டுத் தொரிந்து கொண்டேன்.  பின்பு இந்தியாவின் காடுகள் குறித்தும், தமிழகத்தின் காடுகள், வகைகள் குறித்தும் சொன்னேன்.  பின்பு 5 வகை உயிர்க் குழுக்கள் பற்றிச் சொல்லிவிட்டு அழிந்து போன ‘டோ டோ’ பறவை பற்றி கூறினேன்.






பின்பு இந்த காட்டை ஒட்டிய அடிப்பகுதியில் வசிக்கும் சில சிறிய பாலுட்டிகள் பற்றியும், அவற்றின் உணவுச் சங்கிலியின் அம்சம் பற்றி சொன்னேன். அப்படியே ‘காடுகள்’ வீடியோவைக் காட்டிவிட்டு பாலூட்டிகள் என்றால்  என்ன? வகைகள் என்னென்ன என்று கூறினேன்.  பின்பு அலுங்குகள்  எனப்படும் எறும்பு திண்ணிகள் பற்றி வகுப்பைத் துவக்கினேன்.  வகுப்பில் ஒரு சிலரைத் தவிர பல குழந்தைகளுக்கு இதைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. எறும்பு தின்னியின் படத்தைக் காட்டி விளக்கினேன்.  இவற்றின் வகைகள், உருவம், வாழிடம், சிறப்புகள், எடை, தகவமைப்பு, உணவு என பல செய்திகளை அவர்களிடத்தில் கதை போலச் சொல்லி விளக்கினேன். பின்பு அவற்றின் ஆயுட்காலம் பற்றியும், உடலில் எடையில் 3 இல் ஒரு பங்கு செதில்கள் எனவும், அவற்றின் குறைவான பார்வைத்திறன் பற்றியும் சொன்னேன்.  






தொடரும் வேட்டையாடுதல் இந்த விலங்கை இன்று அழிவிற்கு கொண்டு போய் விட்டது எனக் கூறினேன்.  மருத்துவம், மருந்து என எண்ணற்ற அலுங்கு நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறினேன்.  அழிவின் விளிம்பில் உள்ள நம்மூர் அலுங்குகளைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல் குறித்து எடுத்துக் கூறினேன்.
பின்பு 5 குழுக்களாக குழந்தைகளை பிரித்து, குழுத் தலைவரை நிர்ணயித்தேன். சிறிது இடைவெளியில் பிறகு குழுத்தலைவர் அனைவரின் முன்பும் வந்து வகுப்பில் கலந்து கொண்டதை மறுபடியும் எடுத்துக் கூறினர்.





வந்திருந்த அனைவருக்கும் அலுங்கு படம் போட்டை அட்டைகளை வழங்கினேன்.  வகுப்பின் இறுதியில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம்.







மேலும் அலுங்கு பற்றிய வீடியோ ஒன்று காட்டிவிட்டு இந்த அறையில் காட்சிக்கு வைத்திருந்த சிறிய அலுங்கு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.  பயன் பெற்றனர்.




இந்த மாதிரியான சிறிய விலங்குகள் பற்றிய செய்திகளை பலருக்கும் தெரிவிக்க இம் மாதிரியான சிறிய விழிப்புணர்வு நிகழ்ச்சி அவசியம். வளரும் கிராமத்து குழந்தைகள் அவர்களை சுற்றி உள்ள விலங்குகளைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது  அவசியம் அல்லவா !!! அதற்கு இம்மாதிரியான சிறிய நிகழ்ச்சிகள் நிச்சயம் உதவும். வன விலங்குகளை பாதுகாக்க, சூழல் அக்கறையான வளரும் தலைமுறைகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பிரவின்.   

அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி.    

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 36



IUCN – வருடாந்திர கூட்டம் - 2014  டெல்லி

ஓவ்வொரு வருடமும் IUCN எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குழு தங்களது வருடாந்திர கூட்டத்தை ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தி வருகிறது. இந்தாண்டு நம் டெல்லியில், அக்டோபர் 30 முதல் நவம்பர்  2 வரை நடைபெற்றது.  இதனை மத்திய அரசின் வனத்துறையுடன், சென்ட்ரல் ஜூ அத்தாரிட்டி இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.




சென்ட்ரல் ஜூ அத்தாரிட்டியின் நிரந்தர அங்கமான, அவர்களுக்கு உதவிகளை புரிந்து வரும் எங்கள் அலுவலகம் சார்பில் நாங்கள்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அலுவலகத்திலிருந்து அனைத்து வன விலங்கு ஆராய்ச்சியின் விஞ்ஞானிகளும், சூழல் ஆசிரியர்களும் கலந்து கொண்டோம்.  இந்த கூட்டம் ஹோட்டல் லலித்தில் ஏற்பாடு செய்திருந்ததுது.  இந்த ஆண்டுக்கான மைய குறிக்கோள்; ‘One Plan Approach”, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், பூங்கா நிர்வாகிகளும், வனததுறை அலுவலர்களும், உயர் பதவி அமைச்சர்களும் வருகை தந்திருந்தனர்.  






மூன்று நாட்களும் பல்வேறு விவாதங்குகள் - நடந்தன.  அனைத்தும் சில வகையான அழிவின் உச்சத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது பற்றியும், கவனிக்காமல், மட்டமாக உள்ள சில இந்திய வன விலங்கு பூங்காவிலுள்ள விலங்குகள் என்ன செய்வதென்றும், விலங்குகளை அவற்றின் அழிநிலையை கணக்கிட வேண்டிய புது உத்திகள் குறித்தும், ஆசியாவில் உள்ள சில குறிப்பிட்ட அதிகம் கவனிக்க வேண்டிய உயிரினங்கள் குறித்தும், வன விலங்கு மரபியல் பற்றிய உலகளாவிய குழு தொடங்கப்பட வேண்டியும் , இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு குறித்தும், அடுத்து நாம் செய்ய வேண்டிய வேலைகள் பற்றியும், காலநிலை மற்றம் குறித்து மிகப் பிரம்மாண்டமாக உலக அளவில் நடக்கப் போகிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடுகிற நிகழ்வும் என பல முக்கிய நிகழ்வுகள் இந்த மூன்று நாட்கள் நடந்தது.





முதல் நாள்       ஒன்னி பயர்ஸ்  - தலைவர் CBSG   -  சு . சின்ஹா  – IUCN  - இந்தியா. W .S.  போனால்   -   இந்திய வனத்துறை; சாலி வாக்கர் - ஜூ அவுட்ரீச் அமைப்பு ஆகியோர் பேசினார்கள்.
தொடர்ந்து   -  இந்தியாவில் நடந்த வனவிலங்கு அபிவிருத்தி மேலாண்மை திட்டங்கள் குறித்து பேசினார். பின்பு கடந்த வருடத்தின் ஆண்டறிக்கை விளக்கமாக கூறினார்கள்.





பின்பு “ஒன் பிளான் அப்ரோச்” என்றால் என்ன என்பதை விளக்கினார்கள். பின்பு தொடர்ந்து முழு உரையாடல்கள் நடந்தன. இரவில் மததிய அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டோம்.  நம் இந்திய பாரம்பரியமும் புகழும் மற்ற நாட்டினர் உணரும் வண்ணம் நம் பராமாய இசை, நடனம், பாடல் என கோலாகலமாக இருந்தது  நானும் கூட இதில் நடனமாடினேன்.  மகிழ்ந்தேன்.

ஓற்றைக் கொம்பு காண்டாமிருகம் காப்பாற்ற இந்தியா எடுத்துவரும் சீரிய முயற்சி பற்றி விவாதிக்கப்பட்டது.  “காண்டாமிருகம் - நமது லட்சியம் 2020” ல்  நமது தொலை நோக்கு பார்வை என்ன? என சுசி எல்லிஸ் - (இன்டர்நேஷனல் காண்டமிருக பாதுகாப்பு அமைப்பு) மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.
.




குழுக் கலந்துரையாடல் என்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. மதிய உணவிற்கு பின்பு டெல்லி பூங்காவை பார்வையிட்டோம்.  பலவிதமான, இதுவரை நான் பார்த்திராத பலவகை விலங்ககளான இமாயலய கரடி, ஹீலாக் ஹீலாக் எனும் குரங்கு, முதலைகள் போன்றவை பார்ப்போரை  பிரம்மிக்க வைத்தது.  மேலும் இன்றைய நாளில் நடக்க விருந்த மத்திய அமைச்சகத்தின் நிகழ்வில் எங்களையும் பங்கேற்க அழைத்தனர்.  மத்திய அரசின் வனவிலங்கு வேட்கை தடுப்பு துறையும் - டெல்லி பூங்காவும் இணைந்து "இத்தனை வருடங்களாக வன்முறை வேட்டையினால் கை பிடிக்கப்பட்ட"  புலித்தோல், காண்டாமிருக கொம்பு, கரடி முடி, முயல் முடி, பல் போன்றவற்றை தீயிட்டு எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் மத்திய அரசின் சுற்றுச்சூழல்  அமைச்சர் திரு.ஜாவேத்கர் கலந்து கொண்டார். தீயில் எரியும் இந்த புலித்தோலை பார்த்ததும் சற்றே பயமும், வேட்டையின் தீவிரதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பின்பு  டெல்லியின் "பழைய கோட்டைக்கு"  சென்றோம்.  அங்கு ஒலி-ஒளி சித்திரம் நடைபெற்றது. நம்மை பழைய காலததிற்கோ கூட்டிச் சென்றது, மிகவும் அருமை.











தொடர்ந்து WAZA  – தொடக்க நிகழ்வு. மாலை உணவு நிகழ்வில் கலந்து கொண்டோம். அனைவரும் நன்றி சொல்லிவிட்டு நாளை மறுநாள் கோவைக்கு புறப்பட்டோம்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் எனக்கு ஒரு புது வித்தியாசமான அனுபவத்தை தந்தது.  குறிப்பாக பல நாட்டு அறிஞர்களுடன் பேசவும், அவர்களின் சிறப்பான வேலைகளைப் பற்றியும் தொpந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது. கலந்து கொள்ள வாய்ப்ப கொடுத்த பன்னாட்டு வன விலங்கு நிறுவனமும் அழைத்து சென்ற என் அலுவலகத்தின் சாலி வாக்கர் அவர்களுக்கு என் நன்றிகள்.


அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 


தொடரும் நம் சூழல் பயணங்கள்: 35



கட்டுரை 
காணாமல் போகும் காட்டு நண்டுகள்:

நன்னீர் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள சில அரிய வகைக் காட்டு நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்ததைப் பற்றியும், அவற்றின் வாழிடச் சுருக்கம் பற்றியும், தற்போது  மேற்குத் தொடர்ச்சி மலையில் அவற்றின் நிலை பற்றியும் நான் எழுதிய சிறிய கட்டுரை “தி இந்து" தமிழ் நாளிதழில் வெளியாகியது அதை  இங்கே காணலாம்.  நன்றி !!!




http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6609417.ece



அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி.

Tuesday, 18 November 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 34

வனவிலங்கு வார விழா நிகழ்ச்சி:
விநாயகம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி

வனவிலங்கு வார விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியை சேலம் -விநாயகம்பட்டி அரசு நடு நிலைப்  பள்ளியில் நடத்தினேன். பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. கிரிஜா அவர்களை சந்தித்துவிட்டு, நிகழ்ச்சிக்கு தேவையானவற்றை தயார் செய்தேன் . சுமார் 63 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு, இன்றைய  நாளில் நாம் என்ன கற்று கொள்ளப் போகிறோம்  என சொன்னேன். வன விலங்கு வார விழா ஏன் கொண்டாட வேண்டும்? எனவும் கூறினேன். சில மாணவர்களிடம் மட்டும் அவர்கள் பெயர், வகுப்பு  மற்றும் கடைசியாக அவர்களின் காட்டு  பயண அனுபவம் குறித்து கேட்டேன். இந்திய குரங்குகளை பற்றி ஒரு சிறிய அறிமுகத்துடன் ஆரம்பித்தேன். நமது மலைகளைப் பற்றியும், இங்கு காணக் கூடிய விலங்குகளைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தேன். இந்த பகுதி கிழக்குக் தொடர்ச்சி மலைக்கு அருகில் இருப்பதால் சேர்வராயன் மற்றும் கொல்லி மலைகள் சிறப்பையும் அங்குள்ள சில பாலூட்டிகளைப் பற்றியும் சொன்னேன். 



பலவகைப்பட்ட விலங்கு அட்டைகளும், வண்ணப்படங்களும், சிறிய விலங்கு கதை புத்தகங்களையும், வகுப்பறையில் பார்வைக்கு வைத்திருந்தேன். அனைவரும் இதனை பார்வையிட்டனர். பின்பு பொதுவாக  வன விலங்குகளின் நன்மைகளையும், நமது காட்டின் நன்மைகளின் எடுத்து சொன்னேன்.



உலகளவில் அழிந்துபோன, அழிவில் உள்ள, நம்மூர்  பகுதியில் அழிவை எதிர்நோக்கியுள்ள  மஞ்சள் தொண்டை குருவி, மலை அணில், தங்க பல்லி, அழுங்கு பற்றிய பல சுவாரசிய தகவல்களை கதை போலச் சொல்லிவிட்டு சோலை காடுகளைக் காப்போம்  என்ற வீடியோவைப்  போட்டுக் காட்டினேன். 



மேலும், வேட்டையும், சுற்றுச்சூழல் சீர்கேடும் எப்படி மனிதனை அச்சுறுத்கிறது என்று சொல்லி விட்டு ஒரு ''Energizer'' என்ற ஒரு விளையாட்டை விளையாட செய்தேன்.

பின்பு அனைவரையும் மூன்று குழுக்களாக பிரித்து வௌவால் தகவல் பெட்டகத்தை  கொடுத்தேன். அதை தொடர்ந்து சுமார்  15 நிமிடங்களுக்கு காட்டு வௌவால்களின் வகைகள், முக்கியத்துவம், அச்சுறுத்தல்கள்,  பற்றியும் விவரமாக எடுத்து சொன்னேன்.

அப்படியே குழுவிற்கு ஒரு குழுத்தலைவரை நிர்ணயிதேன். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் தயாரானார்கள். ஒவ்வொரு குழுத் தலைவரும் அனைவர் முன்னாலும் வந்து "வௌவால்கள்" குறித்த தகவல்களை சொல்லிவிட்டு வந்தனர். அனைவருக்கும் கைதட்டல்கள் மூலமாக நன்றிகளை சொல்லிவிட்டு, நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க என்ன என்ன செய்ய முடியும் என்றும்,  சொல்லிவிட்டு, வன விலங்கு பாதுகாப்பு உறுதிமொழியை சொல்லி, வன விலங்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டேன்.    




வன விலங்கு குறித்த சேதி, தினம் தினம் நமது காட்டு மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்போதுதான் வன விலங்கு வேட்டை குறையும், நமது காட்டின் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கப்படும்.

வன விலங்கு வார விழா அன்று மட்டும் இந்த பரப்புரை போதாது. நமது முழக்கம் எப்போதும் நம் மண்ணையும், மலைகளையும், நம் மக்களையும், நமது உயிரினங்களையும் பாதுகாக்க தொடரும். 

இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய பள்ளி தலைமை ஆசிரியை, திருமதி. கிரிஜா மற்றும் இதர ஆசிரியர்களுக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்ச்சியை நடத்த எனக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் வழங்கிய இந்திய அரசின் வன விலங்கு குற்றத் தடுப்பு அமைப்பிற்கும் (Wildlife Crime Control Bureau) என் நன்றிகள். மேலும் ZOO/WILD அமைப்புகளுக்கும் என் சிறப்பு நன்றிகள்.    

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 

Saturday, 8 November 2014

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 

அழுங்குகளைப் பார்த்து ரசிப்பேன்!
அழிவிலிருந்து பாதுகாப்பது என் கடமை ! 


Wednesday, 5 November 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள் 34

வன விலங்கு வார விழா நிகழ்வு 3
விநாயகம்பட்டி அரசுப் பள்ளி, சேலம்

தொடரும் நம் சூழல் பயணங்கள் 33


வன விலங்கு வார விழா நிகழ்வு 2
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம்


வன விலங்கு வார விழாவின் இரண்டாவது நிகழ்ச்சியை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிகழ்ச்சி ஞாயிறு (5.10.2014) மற்றும் திங்கள் (6.10.2014) ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்களும் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுகாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்திருந்தேன்.




முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்தேன். வெறுமனே வன விலங்கு கருத்துக்களை சொல்லாமல், நமது காடுகள், வளங்கள், தண்ணீர், வன விலங்கு குறித்த பல விளக்க படங்கள், அட்டைகளை காட்சிக்கு வைத்திருந்தேன். பூங்காவிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆர்வமாக பார்த்தனர். நம்மை சுற்றி உள்ள காட்டு விலங்குகள் குறித்தும் நான் விளக்கமாக கூறினேன். காடுகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதின் அவசியத்தை சொன்னேன். இன்று ஞாயிறு என்பதால் பூங்காவே, மக்கள் கூட்டத்தில் மூழ்கி இருந்தது.  



பூங்கா ஊழியர்கள் கூட…

பூங்காவில் பணி புரியும் ஊழியர்களும் இந்த கண்காட்சியை வந்து பார்த்து சென்றனர். மாலை ஐந்து மணி வரை இப்படியே குழுக் குழுவாக வரும் பொது மக்களுக்கும், மாணவர்களுக்கும் மிக எளிய தமிழில் வன விலங்கு பாதுகாப்பு குறித்த கருத்துக்களை எடுத்துச் சொன்னேன். அவர்களை சுற்றி இவ்வளவு உயிரிகள் உள்ளதா என பலரும் ஆச்சர்யத்தில் சென்றதை பார்க்க முடிந்தது. 



இதே போல் இரண்டாவது நாள் கூட பூங்காவில் கூட்டம் அதிகம்தான்.  




நால்வர்

இன்று காலையில் தொடங்கி மாலை நான்கு மணி வரை பொது மக்களுடன் கழித்தேன். இன்றைய தின ஆரம்பத்தில், என்னுடன் நான்கு குழந்தைகள் வந்து ஒட்டிக் கொண்டனர். அவர்கள் பக்கத்துக்கு கிராம பள்ளி செல்லும் சிறார். காட்டு முயல், குரங்கு, ஆமைகள், காட்டு மாடு, அலுங்கு குறித்த தகவலுடன் வௌவால் குறித்த தகவல்களை அவர்களுக்கு சொன்னேன். குழந்தைகளுகாகவே நான் கொண்டுவந்திருந்த வண்ண வண்ண முக முடிகளை கொடுத்தேன். வன விலங்குகள், பூங்காவில் கடைபிடிக்க வேண்டிய சில விசயங்களை குறித்த சில வாசகங்களை சொல்லிக் கொடுத்தேன். அட ..இந்த மாணவர்கள் பரப்புரைக்கு தயார். அவர்கள் முகத்தில் முகமுடி, கையில் பதாகை, மணிக்கட்டில் ஒரு அட்டை. அவர்களை அப்படியே பூங்காவை சுற்றி வர சொன்னேன். சொல்லிக் கொடுத்த வாசகங்களை சொன்னபடியே பூங்காவை வலம்வந்தனர். அனைவரையும் கவர்ந்தனர். குறிப்பாக மான் கூண்டு, குரங்கு கூண்டு, நட்ச்சத்திர ஆமை உள்ள இடம், பறவைகள் உள்ள கூண்டின் அருகில் சென்று "வன விலங்குகளுக்கு உணவளிக்காதீர்கள்" என்று சொல்லிவிட்டு வந்தனர்.                     



நான் இவர்களுடன் செல்ல முடியவில்லை. ஆனால், நிறைய பார்வையாளர்கள் இவர்களிடம் பேசியதாக சொன்னார்கள்.  இந்த மாணவ மணிகள் வந்தது.. எனக்கு உதவியது.. மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.



அவர்களின் பெயர், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண்ணை எழுதி வாங்கிக் கொண்டேன். அப்படியே எனது விலாசத்தையும் கொடுத்தேன். மேலும் இந்த நால்வருக்கும் (மனோஜ் குமார், ரசிகப் பிரியா, லீனா தமிழ்வாணன் மற்றும் பரத் ராஜ்) வன விலங்கு வாழ்த்து அட்டைகளை கொடுத்து, வாழ்த்தி, அன்போடு வழியனுப்பி வைத்தேன். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதை கண்டு கொண்டேன்.        

சுவாரசிய சந்திப்பு 

இவர்களின் சந்திப்பு போலில்லாமல், அமைதியாகத்தான் நடந்தது திரு.சௌந்தர் ராஜன் அவர்களின் சந்திப்பு. சுமார் அரை மணி நேரம் ஆகியும் இவரும், இவர் நண்பரும் இந்த கண்காட்சி இடத்தை விட்டு நகர்ந்தபாடில்லை .. யாருமே என் பக்கம் வரவில்லை என்றாலும், நான் எதாவது செய்து பார்வையாளர்களை என் பக்கம் ஈர்த்து விடுவேன். அப்படி இருக்க ..இப்பொது இருவர் என்னருகே ..விடுவேனா? சிறிய ஊன் உண்ணிகள் குறித்தும், பாருகள் எப்படி குறைந்து போனது என்றும் சொன்னேன். அப்படியே ராட்சத சிலந்தி நமது காடுகளில் உள்ளது என்றும் சொன்னேன். அவர்கள் சில தகவல்களை சொல்லிவிட்டு சென்றனர்.  



குதூகல ஜனங்கள் 

இன்று ரமலான் என்பதால் முகமதியர்கள் கூட்டத்தை பூங்காவில் எங்கும் காண முடிந்தது. நான் ரொம்ப "பிஸி" என்று படு வேகமாக, போன் பேசிய படியே பீறிட்டு நடை போட்ட அசட்டு முகங்களையும் காண முடிந்தது.    

சின்ன சின்ன குட்டீஸ் இங்கு வந்து "கடலாமையின் கதை" புத்தகத்தை பார்த்து, படித்து விட்டு சென்றதை பார்த்தேன். 



சில பள்ளி ஆசிரியர்கள், அவர்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து "பாரு பாப்பா" நீ உன்னோட புக்ஸ்ல படிச்சிருக்கல..Amphibians ..நியாபகம் வருதா? தண்ணீர்லயும் வாழும், நிலத்திலயும் வாழும்..என்ன புரியுதா? என கேட்டு ஆர்வத்தை தூண்டியதையும் கண்டேன். 

இது போட்டோ கடை இல்லை

சும்மா கை கட்டி நின்ற என்னை ஒருவர் ..சார். நீங்க போட்டோகிராபரா? கொஞ்சம் எங்க ரெண்டு பேரையும் வச்சு ஒரு போட்டோ எடுத்து கொடுங்கள் என கேட்டதும், எனக்கு முதலில் கொஞ்சம் கோபமாக இருந்தாலும், பின்பு மெதுவாக விளக்கினேன். அண்ணா. இது வன விலங்கு விழிப்புணர்வு நடக்கும் இடம். இது போட்டோ கடை இல்லை, என சொன்னேன். 

சற்று நேரத்திலே மற்றுமொருவர் "தம்பி இங்க இருக்குறதெல்லாம் எதுக்கு ? நீங்க பைக்குக்கு ஸ்டிக்கர் ஓட்டுவீங்களா ? என அவர் கேட்க ..  இல்லை என சொல்லி நான் நொந்து போய் ஐயோ.. சாமி ..ஆள விடு.. என வெளியில் சென்று அன்னாசி பழம் சாபிட்டிட்டு விட்டு வந்தேன்.     
  
இந்த பூங்கா ஆரம்பித்து பல வருடங்கள் ஆனாலும் இதுதான் வன விலங்கு குறித்த மூன்றாவது  நிகழ்ச்சியாக இருக்கும் என் நான் நினைக்கிறன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் பொதுவாகவே, வெகு ஜன மக்களுக்கு காட்டுயிர் குறித்த கரிசனம் அதிகம் உள்ளதையும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், வனத் துறையும் இணைந்து செயல்பட்டு வனத்தை பாதுகாக்க பல வித செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

நான் திட்டமிட்டபடி இந்த நிகழ்ச்சி ஓரளவிற்கு முடித்து விட்டேன். பார்ப்போம்..வரும் மாதங்களில் இன்னும் நிறைய நிகழ்ச்சிகளை இங்கு நடத்த முடியுமா என்று..

நான் சற்றும் எதிர் பார்க்காமல் இருந்த சமயத்தில், என்னை காண வந்த அன்பான "காட்டு மாடு" என்னை வசீகரித்தது.     



நன்றி
இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கிய திரு.வி. கணேசன் இ.வ.ப, முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும் திரு.தனபாலன், மாவட்ட வன அலுவலர், சேலம். மற்றும் குரும்பப்பட்டி பூங்கா வன சரகர், மற்றும் ஊழியர்களுக்கும் என் நன்றிகள். நிகழ்ச்சிக்காக பல வித தகவல்களையும், அட்டைகளையும் வழங்கிய, உதவி நல்கிய என் ஜூ அவுட்ரீச் அலுவலகத்திற்கும் என் நன்றிகள். 

அன்புடன் 
பிரவின் குமார் 
கோயம்புத்தூர் 
அலைபேசி: 9600212487