About

Monday, 3 March 2014

ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014.

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 13
ANIMAL WELFARE FORTNIGHT PROGRAM 2014.

கடந்த 31/1/2014 அன்று வெள்ளிக்கிழமை animal welfare fortnight 2014 நிகழ்சிக்காக GRG polytechnique கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சி இரண்டு நிகழ்வாக நடந்தது.  1. animal welfare fortnight பேச்சு 2. வினாடி வினா போட்டி. 

1. கல்லூரி முதல்வரை சந்தித்துவிட்டு நான் செமினார் ஹாலுக்கு சென்றேன். முதலில் என் அலுவலகத்தை பற்றி சொல்லிவிட்டு, ஏன் சனவரி 14 - 31 வரை animal welfare fortnight கொண்டாட வேண்டும் என சொல்லிவிட்டு வியத்தகு காட்டு விலங்குகள், அதிசய வீட்டு விலங்குகள் என பல தகவல்களை சொன்னேன். 

பின்பு மேன்மை மிகு மேற்குத் தொடர்ச்சிமலை பற்றியும் அங்குள்ள பல்லுயிர் சூழல் பற்றியும் சொன்னேன். பின்பு இந்தியாவில் இருந்து அழிந்துபோன (பூண்டோடு அற்று போன) சில விலங்குகளை பற்றியும் கூறினேன். நாகரீக மாற்றம் மற்றும் பேராசை எவ்வாறு நம் சூழலைக் கெடுக்கிறது, நம் பலவகைப்பட்ட விலங்குகளை அச்சுறுத்துகிறது எனவும் விளக்கினேன். பின்பு ஒரு சிறிய வீடியோவை காட்டிவிட்டு, save nature otherwise no future என்ற எழுச்சிமிகு வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டேன்.    

2. ஏற்கனவே பிரிக்கப்பட்ட 4 பேர் கொண்ட 8 குழுக்களின் மத்தியில் 'தாவர-விலங்கு பற்றிய வினாடி வினா' நிகழ்ச்சியை நடத்தினேன். இந்த போட்டி நான்கு சுற்றுக்களாக நடந்தது. இதில் எல்லா குழுக்களும் மிக உற்சாகமாக கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அட்டகாசமாக பதிலளித்தனர்.  






இதில் 55 பாயிண்ட்களுடன் giraffe குழு முதலிடம் பெற்றது. முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கியது கல்லூரி நிர்வாகம். அனைத்து வகுப்பாசிரியர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். 




இந்த வகுப்பு, அவர்களுக்கு விலங்குகளை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகிறேன்.  
அனைவர்க்கும் நன்றிகளை சொல்லிவிட்டு திரும்பி வந்தேன்.

என்றும் 
பிரவின்




Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 51 கடந்த சூன் மாதத்தின் முதல் வாரத்தில் "Ravisankaran Fellowship" என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்காலர்ஷிப் நேர் முக தேர்விற்காக மும்பை சென்றிருந்தேன். நான் இதில் தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும் இதன் மூலமாக நான் "மங்கோலியா" நா… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 49 ஓவ்வொரு வருடமும் சூன் 5 "உலக சுற்றுச் சூழல் தினமாக" கொண்டாடப் படுகிறது. கடந்த சூன் 5 ம் தேதி, மும்பையின் இரண்டு  இடங்களில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காகவும், இரண… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 52: G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம்.  கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 48 கடந்த மார்ச் மாதத்தில் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்ட்டரில் இரண்டு மணி நேர "காடுகளை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்தினேன். சுமார் 18 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 50 இரண்டாவது நிகழ்ச்சி "கோலபா" என்ற கடற்கரை சேரி குழந்தைகளுக்கு. மொத்தம் 12 குழந்தைகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள குழந்தைகள்.  இவர்களுக்காகவே மீன்கள், நண்டுகள், தட்டான்பூச்சிகள், நத… Read More

0 comments:

Post a Comment