About

Friday, 11 April 2014

தொடரும் நம் சூழல் பயணங்கள்: 19

உலக வன நாள் விழா 2014.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 21ம் தேதி உலக வன நாளாக கொண்டாடப்படுகிறது.  கடந்த மார்ச் 21 அன்று சேலம் வன சரகம் சார்பில்   நடைபெற்ற உலக வன நாள் நிகழ்சிக்காக சேலத்தில் உள்ள சி எஸ் ஐ பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றிருந்தேன். இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் உலக வன நாள் விழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா வன சரகர் திரு.இளங்கோ அவர்களுடைய அறிமுக உரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு வனங்கள் பற்றியும், அங்குள்ள சிறப்பான விலங்குகள் பற்றியும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் பேச நான் சென்றிருந்தேன். நான் பேசும்போது நமது கிழக்கு தொடர்ச்சி மலைகளை பற்றியும், மிக குறிப்பாக சேர்வராயன் மலையை பற்றியும் அங்குள்ள வன உயிரினங்களை பற்றியும் சொன்னேன். பின்பு காடுகளின் அவசியத்தையும் காடுகளை பாதுகாக்க இளைய சமுதாயத்தின் பங்கு குறித்தும் கூறினேன்.   







பின்பு நமது மலைகளில் காணக்கூடிய வேறு எங்கும் காண முடியாத சில பாலுட்டிகளைப் பற்றி சொன்னேன். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காடுகள் வளம் இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்தது என்றும், தனி மனித லாபத்திற்காக எப்படி காடுகள் காணாமல் போகிறது என்றும் சொனேன். சமீபத்திய ஆராய்ச்சிகள், அழிவில் உள்ள பாலுட்டிகள் மற்றும் கவனம் செலுத்த வேண்டிய உயிரினங்கள் பற்றியும் இந்த மாணவர்களிடத்தில் சொன்னேன். பின்பு சேகர் தத்தாத்ரீ அவர்களுடைய "சோலைக் காடுகளை காப்போம்" என்ற வீடியோவை காண்பித்தேன். பின்பு தனிமனித சூழல் அக்கறையும், அனைவரும் தங்களால் முடிந்த வரை இந்த காடுகளையும், வன விலங்குகளையும் பாதுகாக்கலாம் என்று சொன்னேன். பல மாணவர்கள் ஆர்வமாக கேள்விகளை கேட்டனர். இந்த வகுப்பு முழுவதும் ஒரு கலந்துரையாடல் போலத்தான் இருந்தது. கடைசியாக "யானை டாக்டர்" புத்தகத்தில் இருந்து சில வரிகளை சொல்லிவிட்டு அமர்ந்தேன்.                



இந்த நிகழ்ச்சியில் வனவிலங்கு விழிப்புணர்வு குறித்த சிறிய கண்காட்சியையும் வைத்திருந்தேன். மாணவர் ஆர்வமாக பார்வையிட்டு சென்றனர். 



இந்த நிகழ்ச்சிக்காக அனுமதி வழங்கிய திரு.வி.கணேசன் IFS அவர்களுக்கும், எனது ஆசிரியர் சஞ்சய் மொலூர் அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த நிகழ்ச்சிக்காக பலவித தகவல்களையும், குறிப்புகளையும் வழங்கிய முனைவர். தானியல் அவர்களுக்கும் என் நன்றிகள்.    

இந்த நிகழ்ச்சி வெறும் நிகழ்ச்சியாக இல்லாமல் இந்த மாணவர்கள் நிச்சயம் இந்த காட்டை பாதுகாக்க எதாவது முயற்சி எடுக்க ஒரு எழுச்சியாக இருந்திருக்கலாம் என நம்புகிறேன்

நமது ஆராய்ச்சிகள் எப்போதும், காடுகள் மற்றும் வன விலங்கு பாதுகாப்பிற்காக !!!!!

பிரவின்
கோயம்புத்தூர்

     

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 55அம்பை - ரோட்டரி நிகழ்ச்சி  திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் ரோட்டரி சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக எனது பேராசிரியர்.திரு.விஸ்வநாதன் அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள்.  நான் சூழல் பாதுகாப்பு பற்றியும், சில… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 56 கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண்டாவது நிகழ்ச்சி 14.8.2015 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி 27 பிப்ரவரி 2012 ல் நன்னீ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 54 நம்மைச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி  புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளியில் ஒரு வனவிலங்குகள் குறித்த நிகழ்ச்சிக்காக பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.பாக்கியநாத… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 58 மகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளி மரக் கன்று  வழங்கும் நிகழ்ச்சி கடையநல்லூர், தென்காசி    கடந்த வருட செப்டம்பர் முதல் இந்த 2016 சனவரி முடிய நான் சீனாவில் இருந்தேன். அதனால் என்னால் நமது தமிழகத்தில் சுற… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 57 அம்பை - லயன்ஸ் நிகழ்ச்சி:  அம்பாசமுத்திரம் லயன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சயில் பேச வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறிய புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தேன். தொடர்ந்து சூழல் கரிசனம் என்ற தலைப்பில் பல தகவல்களை பகி… Read More

0 comments:

Post a Comment