About

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, 2 March 2016

தொடரும் நம் சூழல் பயணங்கள் 54

நம்மைச் சுற்றி விலங்குகள் - பள்ளிக்கூட நிகழ்ச்சி 
புனித சவரியார் பள்ளி - பாளையங்கோட்டை

கடந்த 10.08.2015 அன்று புனித சவரியார் பள்ளியில் ஒரு வனவிலங்குகள் குறித்த நிகழ்ச்சிக்காக பள்ளி தமிழ் ஆசிரியர் திரு.பாக்கியநாதன் அவர்கள் அழைத்திருந்தார்கள்.    





நம்மூர் விலங்குகள் பற்றியும், அயல் நாட்டின் சில விலங்குகள் பற்றியும் சொன்னேன். சில விளையாட்டுகள், பாடல்கள், படங்கள் மூலமாக சில சிறந்த தகவல்களை சொல்லி, அவர்களுக்கு காட்டுயிர் கரிசனத்தை தூண்டி விட்டு வந்தேன்.  



     

இந்த நிகழ்ச்சியில் மாணவ கண்மணிகளை நான் அதிகம் பேச வைத்தேன்.  

நன்றிகள் திரு.பாக்கியநாதன் அவர்களுக்கு.  Zoo Outreach அமைப்பு தகவல் பெட்டகத்தை வழங்கி உதவியது.  

அன்புடன் 
பிரவின் 
சீனா 


Saturday, 21 November 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 53:



G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

இரண்டாவது நிகழ்ச்சியை பள்ளியின் நாட்டு நலப் பணி மாணவர்களுக்காகவே இரண்டு மணி நேர வௌவால் வகுப்பை நடத்தினோம். வெளவால்களின் வகைகள், வாழிடம், உலகின் பெரிய, சிறிய வெளவால் என தொடர்ந்து, அவற்றின் சிறப்பியல்புகளை பற்றி சொன்னேன். 10 நிமிட இடைவெளிக்கு பிறகு வௌவால் நன்மைகள் குறித்தும் அவைகளுக்கும் மரங்களுக்கும் உள்ள தொடர்பை சொல்லி முடித்தேன். 






   நன்றி

   அன்புடன் 
   பிரவின்   

தொடரும் நம் சூழல் பயணங்கள் 52:


G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (கொடைக்கானல் அடிவாரம்) ஏற்பாடு செய்திருந்தோம். இது வெறும் தகவல் சொல்லும் ஒரு வகுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய எளிய கற்றல் வழிகளை உபயோகித்தோம். மாணவர்கள் அனைவரும் எல்லா வித கற்றல் செயல் பாடுகளில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். 

பாலூட்டிகள், மீன்கள் பற்றியே அதிகம் நிகழ்ச்சி வடிவமாகப்பட்டிருந்தது. காடுகள், நன்னீர் வாழ் உயிர்கள் குறித்தான விளக்க படங்கள், கானொலி, குழு விளையாட்டு என நிகழ்ச்சி சென்றது.          

1. மாணவர்கள் - குழு விளையாட்டு: எந்த குழு அதிக உயிரினங்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் என்று பார்க்க இது.



2. குழு 2: பறவைகளை தேடிடும் குழந்தைகள். 



3. குழு 3: மீன்களின் வழங்கு பெயர் என்ன ? என வினவும் மாணவர்கள் 




4. பழனி மலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 



5. உறுதிமொழி சொல்லும் நம் சிட்டுகள்.  


அனைவரின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது 

அன்புடன் 
பிரவின் குமார் 

Saturday, 4 July 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 51



கடந்த சூன் மாதத்தின் முதல் வாரத்தில் "Ravisankaran Fellowship" என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்காலர்ஷிப் நேர் முக தேர்விற்காக மும்பை சென்றிருந்தேன். நான் இதில் தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும் இதன் மூலமாக நான் "மங்கோலியா" நாட்டின் காடுகளில் சுமார் ஆறு மாதம் தங்கி இருந்து அங்குள்ள சிறிய பாலுட்டிகளை பற்றி ஆய்வு செய்யவும், அங்குள்ள விலங்கு அருங்காட்சியகத்தில் பயிலவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் இங்கு தெரிவித்து கொள்கிறேன். 




அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 50

இரண்டாவது நிகழ்ச்சி "கோலபா" என்ற கடற்கரை சேரி குழந்தைகளுக்கு. மொத்தம் 12 குழந்தைகள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருமே மீன் பிடிக்கும் தொழிலில் உள்ள குழந்தைகள். 


இவர்களுக்காகவே மீன்கள், நண்டுகள், தட்டான்பூச்சிகள், நத்தைகள் மற்றும் பறவைகள் குறித்து அவர்களின் புரிதலை கேட்டுவிட்டு, சில தகவல்களை சொன்னேன். மேலும் பல விதமான புகைப்படங்களும், வீடியோக்களும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக இருந்தது. 






நன்றிகளுடன். 
பிரவின். 

தொடரும் நம் சூழல் பயணங்கள் 49



ஓவ்வொரு வருடமும் சூன் 5 "உலக சுற்றுச் சூழல் தினமாக" கொண்டாடப் படுகிறது. கடந்த சூன் 5 ம் தேதி, மும்பையின் இரண்டு  இடங்களில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காகவும், இரண்டாவது நிகழ்ச்சி  பள்ளி குழந்தைகளுக்காகவும் என ஏற்பாடு செய்திருந்தேன். 






முதலாம் நிகழ்வில் நன்னீர் உயிரினங்கள், அழிவில் உள்ள சில மேற்கு தொடர்ச்சி மழையின் தாவர, விலங்கு குழுக்களை பற்றி கலந்துரையாடினேன்.




ஆராய்ச்சிக்கான உக்திகள், வன விலங்கு ஆராய்ச்சி நிதி  திரட்டும் வழி  முறைகள் என பலவகைபட்ட விசயங்களை பகிர்ந்து கொண்டேன்.


அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.       
     
அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 
  


தொடரும் நம் சூழல் பயணங்கள் 48



கடந்த மார்ச் மாதத்தில் கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு டியூஷன் சென்ட்டரில் இரண்டு மணி நேர "காடுகளை அறிவோம்" என்ற தலைப்பில் ஒரு சிறிய நிகழ்ச்சியை நடத்தினேன். சுமார் 18 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 



புரியும் வகையிலான எளிமையான அறிவியலுடன் இருந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் கவனிக்க வைத்தது. 





கேள்விகள் பல கேட்டு, துள்ளலான மகிழ்ச்சியுடன் இந்த வகுப்பு நிறைவு பெற்றது.


அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி.